SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

தரமணி தந்தை பெரியார் நகரில் 25 சென்ட் நிலம் ஒதுக்கியும் 28 ஆண்டுகளாக பூங்கா அமைக்காத மாநகராட்சி

2018-06-15@ 01:24:54

வேளச்சேரி: தரமணி, தந்தை பெரியார் நகரில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இடம் ஒதுக்கி 28 ஆண்டுகளாகியும் பூங்கா அமைக்காமல் மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியம் செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னை மாநகராட்சி 180வது வார்டு தரமணி தந்தை பெரியார் நகரில் சுமார் 5 ஆயிரம் வீடுகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியை கடந்த 1991ம் ஆண்டு தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம் கையகப்படுத்தி, அங்கு வசித்து வந்தவர்களுக்கு குடியிருப்பை ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து அப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக, பூங்கா அமைக்கும் வகையில் கருணாநிதி 2வது குறுக்கு தெருவில், சுமார் 25 சென்ட் இடமும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த இடம் ஒதுக்கப்பட்டு சுமார் 28 ஆண்டுகளாகியும் பூங்கா அமைக்க இன்னும் சென்னை மாநகராட்சி எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது.இதனால் இந்த இடத்தில் குப்பை கொட்டவும், இயற்கை உபாதையை கழிக்கவும் அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்படுகிறது. இங்கு கோரைப்புல் அடர்ந்து, வளர்ந்துள்ளதால் பாம்புகள் உள்ளிட்ட விஷப்பூச்சிகள் நடமாட்டமும், அதிகரித்துள்ளது.

அதுமட்டும் இல்லாமல் மறைவாக உள்ள இந்த இடத்தில் இரவு நேரத்தில் மது அருந்துவது, கஞ்சா புகைப்பது உள்பட சமூக விரோத செயல்களிலும் சிலர் ஈடுபட்டு வருவதால், இப்பகுதியை கடந்து செல்லவே பலரும் அஞ்சுகின்றனர். எனவே, இந்த இடத்தில் விரைவில் பூங்கா அமைத்து மக்களின் பயன்பாட்டுக்கு ஒதுக்கி கொடுக்க வேண்டும் என்று, பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘இந்த பகுதியில், பூங்கா அமைக்க இடம் ஒதுக்கப்பட்டு இவ்வளவு ஆண்டுகள் ஆகியும் மாநகராட்சி அதிகாரிகள் பூங்கா அமைக்க தயக்கம் காட்டுகின்றனர். இதனால் நாங்கள் திருவான்மியூர், வேளச்சேரி ஆகிய பகுதிகளில் உள்ள பூங்காவுக்கு, நாள்தோறும் சுமார் 3 கி.மீ தூரம் அலைய வேண்டி உள்ளது. காலியாக உள்ள இந்த இடத்தை ஆக்கிரமிப்பதற்கு ஆண்டுதோறும் பலரும், போட்டி போடுகின்றனர். இந்த இடம் அரசு அதிகாரிகளின் துணையுடன் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதற்கு முன்பாக மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பூங்கா அமைக்க வேண்டும்’’ என்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • amazon_bang_111

    ஆன்லைன் வர்த்தக் நிறுவனமான அமேசானின் சேகரிப்புக் கூடம் பெங்களூருவில் திறப்பு

  • northkorea_southkore

    வட கொரியாவில் முதன்முறையாக தென் கொரியா அதிபர் சுற்றுப் பயணம்

  • americatoday_flood123

    அமெரிக்காவின் கரோலினாவை புரட்டிய ஃபுலோரன்ஸ் புயல்

  • pakistan_vehicls12345

    பாகிஸ்தான் பிரதமர் மாளிகையில் பயன்படுத்தப்படும் 70 சொசுகு வாகனங்கள் ஏலம்

  • jawa_studentelection123

    ஜேஎன்யூ மாணவர் தேர்தல் - அனைத்திலும் இடதுசாரி மாணவர் அமைப்பினர் வெற்றி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்