SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விலைமதிப்பற்ற உயிர்களை காப்பாற்ற மின்வயர்களை பூமிக்கு அடியில் புதைக்க வேண்டும் : மு.க.ஸ்டாலின் கோரிக்கை

2018-06-15@ 01:24:25

சென்னை: விலைமதிப்பற்ற உயிர்களை காப்பாற்ற மின்சார வயர்களை பூமிக்கு அடியில் புதைக்க வேண்டும் என்று பேரவையில் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். சட்டப்பேரவையில் நேற்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: சென்னையில் தாழ்வழுத்த, உயரழுத்த மின்சார கேபிள்கள் மின்கம்பங்களில் அமைக்கப்பட்டுள்ளது. மின் கம்பங்களில் செல்லும் கேபிள்கள் மிக தாழ்வாக அமைந்துள்ளது. இதனால் மின்சாரம் தாக்கி அதிக உயிரிழப்பு ஏற்படுகிறது. மின்சார வயர்களை பூமிக்கு அடியில் புதைக்க வேண்டும் என்று கடந்த 2 ஆண்டுகளாக சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்து வருகிறேன். கடந்தாண்டு பருவமழைக்கு முன் முடியும் என்று அமைச்சரும் கூறினார்.

பின்னர், ‘இதற்காக மத்திய அரசு 2567 கோடி வழங்கியுள்ளது, இந்த பணிகள் நடந்து வருகிறது’ என்று கூறினார். தற்போது இந்த பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அறிகிறேன். புதிய முயற்சியில் மின்சார வயர்களை பூமிக்கு அடியில் புதைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பருவமழைக்கு முன்பாக வேகமாக இந்த பணிகளை முடித்து விலைமதிப்பற்ற உயிர்களை காப்பாற்ற வேண்டும். மீண்டும் இதுபோன்று விபத்து ஏற்படாமல் உறுதி தந்தால் போதாது, அதை நிறைவேற்றி தர வேண்டும். மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும்.
எனது தொகுதியான கொளத்தூர் பகுதியில், துணை மின்நிலையம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். முதல்வரும் 110 விதியின் கீழ் அந்த திட்டத்தை அறிவித்துள்ளார். அதை விரைவில் அமைத்து முடிக்க வேண்டும்.

மின்துறை அமைச்சர் தங்கமணி: கொளத்தூர் பகுதியில் அதிகளவில் மின்கேபிள்கள் உயரத்தில் பூமிக்கு மேலே செல்கிறது. 28 கிமீ தூரத்தில் 10 கிமீ பணிகள் முடிந்து விட்டது. தற்போது, புதிய முயற்சியாக மின் கேபிள்களை அமைப்பதற்கான டெண்டர் பணி நடந்து வருகிறது. முன்னுரிைம அடிப்படையில் இந்த பணிகள் விரைந்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை மாநகரை பொறுத்தவரை இந்த பணிகள் அனைத்தும் வருகிற அக்டோபர் மாதத்துக்குள் முடிவடையும். அரசின் இந்த திட்டங்கள் மூலம் மின் விபத்து இல்லாத தமிழகம் உருவாக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-04-2019

    23-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • MummifiedFoal

    42 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இறந்த குதிரையின் உடலில் உறைந்த ரத்தம்..: ரஷ்ய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

  • SriLankaHomage

    இலங்கை தொடர் வெடிகுண்டு தாக்குதலுக்கு உலகச் சமூகங்கள் அஞ்சலி: பிரான்சின் ஈபிள் டவரில் விளக்குகள் அணைப்பு!

  • selphiGorilla

    கொரில்லாக்களையும் விட்டு வைக்காத செல்ஃபி மோகம் : குஷியான போஸ்கள்

  • QingdaoNavalParade

    சீனாவில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட கப்பல் அணிவகுப்பை ஒட்டி துறைமுகம் வந்தடையும் பல்வேறு நாடுகளின் போர்க்கப்பல்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்