கத்தியால் குத்தி சாப்ட்வேர் இன்ஜினியரிடம் வழிப்பறி பிரபல முகமூடி கொள்ளையன் திருநங்கைகள் உட்பட 5 பேர் கைது
2018-06-15@ 01:24:13

சென்னை: சென்னை அடுத்த வண்டலூர் வெங்கடேசபுரத்தை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (30). இவர் மறைமலைநகர் அடுத்த மகேந்திரா சிட்டியில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை செய்து வருகிறார். இவர், கடந்த 9ம் தேதி இரவு வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார். வண்டலூர் ரயில் நிலையம் அருகே நடந்து செல்லும்போது முகமூடி அணிந்து வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் சந்தோஷ்குமாரை வழிமறித்து சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு அவரது கழுத்தில் இருந்த 6 சவரன் செயின், விலையுயர்ந்த வாட்ச், செல்போன் ஆகியவற்றை பறித்து கொண்டு தப்பியது. இதில், படுகாயமடைந்த சந்தோஷ்குமார் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ஓட்டேரி மற்றும் தாம்பரம் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு சந்தேகத்துக்கு இடமான வகையில் சுற்றித்திரிந்த 5 பேர் கொண்ட கும்பலை ரயில்வே போலீசார் பிடித்து கூடுவாஞ்சேரி மற்றும் ஓட்டேரி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், திண்டிவனத்தை சேர்ந்த பிரபல முகமூடி கொள்ளையன் மதன் (எ) குருமூர்த்தி (25), போரூர் அடுத்த ஐயப்பன்தாங்கல் பகுதியை சேர்ந்த வசந்த் (25) மற்றும் 3 திருநங்கைகள் என்பது தெரிந்தது. மேலும், இவர்கள் 5 பேரும் இரவு நேரங்களில் முகமூடி அணிந்து வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, 5 பேரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடமிருந்து 6 சவரன் செயின், வாட்ச், செல்போன்கள் மற்றும் வழிப்பறிக்கு பயன்படுத்திய கத்தி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் செய்திகள்
ஆட்டோவில் இருந்து தவறி விழுந்த 3 மாத குழந்தை பலி : போதை ஆசாமியால் விபரீதம்
தொழிலதிபரிடம் ரூ.25 லட்சம் நகை கொள்ளை
கழுத்தை அறுத்த கைதிக்கு சிகிச்சை ... தண்டனை கைதிகளுக்கு ஷூக்கள் கிடைப்பது எப்படி? : உயர் அதிகாரிகள் விசாரணை
திருத்தணி அருகே டிக் டாக் வீடியோவால் இளைஞர் கழுத்தை நெரித்து கொலை
மெட்ரோ வாட்டர் ஒப்பந்தம் எடுப்பதில் அடிதடி: 6 பேர் கைது
உபி.யில் மாணவர்கள் போல் தங்கியிருந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் கைது