கெஜ்ரிவால் 4வது நாளாக தர்ணா பிரதமர் தலையிட கோரிக்கை
2018-06-15@ 01:21:29

புதுடெல்லி: ஆளுநர் மாளிகையில் 4ம் நாளாக நேற்றும் கெஜ்ரிவால் தனது தர்ணா போராட்டத்தை தொடர்ந்தார். ஆம் ஆத்மி அரசுக்கு ஒத்துழைப்பு தர மறுத்து பகுதி நேர ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் பணிக்கு திரும்ப உத்தரவிடக்கோரி கவர்னர் அனில் பைஜால் அலுவலகத்தில் கெஜ்ரிவால் 4வது நாளாக தங்கி தர்ணா போராட்டத்தை தொடர்ந்து வருகிறார். அவரது அமைச்சரவை சகாக்களான சத்யேந்தர் ஜெயின், துணை முதல்வர் சிசோடியா இருவரும் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும், ஆளுநர் அனில் பைஜால் இதுவரை சென்று அவர்களை சந்தித்து பேசமால் இருந்து வருகிறார். ஆளுநரின் இந்த செயலுக்கு ஆம் ஆத்மி கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுபற்றி அக்கட்சியின் மாநிலங்களவை எம்பி சஞ்சய் சிங் கூறியதாவது:
தர்ணாவில் ஈடுபட்டுள்ள முதல்வர் கெஜ்ரிவாலை கவர்னர் இதுவரை சந்திக்கவில்லை. முதல்வர் மற்றும் அமைச்சர்களை சந்தித்து பேச கடந்த 4 நாட்களில் 4 நிமிடங்கள் கூட கவர்னருக்கு கிடைக்கவில்லையா?. முதல்வரை சந்திக்க யாரையும் அனுமதிக்க மறுக்கின்றனர். அது ஏன் என்பது புரியவில்லை. எனவே, கெஜ்ரிவால் மற்றும் அமைச்சர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனரா? அல்லது கைது செய்யப்பட்டுள்ளாரா? என்பதை டெல்லி போலீசும், கவர்னரும் தான் விளக்கம் அளிக்க வேண்டும். மேலும், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் கவர்னர் அனில் பைஜால் ஆகியோரை சந்திக்க நேரம் ஒதுக்க கேட்டுள்ளோம். இவ்வாறு கூறினார். இதனிடையே, ஐஏஎஸ் அதிகாரிகளின் பணி புறக்கணிப்பு பிரச்னையில் பிரதமர் மோடி தலையிட வேண்டும் என கூறி அவருக்கு முதல்வர் கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார்.
மேலும் செய்திகள்
உ.பி.யில் வெடி விபத்து; 13 பேர் பலி
அசாமில் கள்ளச்சாராய பலி 85 ஆக உயர்வு
நடிகை விஜயலட்சுமி உடல்நிலை பாதிப்பு
கடந்தவை கையில் இல்லை ... நடப்பவை கையில் உள்ளன : வர்த்தக மாநாட்டில் மோடி பேச்சு
சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு தெலங்கானாவில் 15 லட்சம் வாக்காளர்கள் அதிகரிப்பு
நாட்டில் நிலவி வரும் வேலையில்லா திண்டாட்டத்தை மோடி அரசு ஒப்புக் கொள்ளாது : ராகுல் குற்றச்சாட்டு