SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புஸ்வாணம் ஆன கதைதான் ரஜினி, கமல் பற்றி அமைச்சர்

2018-06-15@ 01:20:20

சென்னை: புதிதாக ஆட்சி பிடிக்க கிளம்பியவர்களின் நிலை புஸ்வானம் ஆன கதை தான் என்று நடிகர் ரஜினி, கமல் ஆகியோரை அமைச்சர் விஜயபாஸ்கர் மறைமுகமாக தாக்கினார். சட்டசபையில் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் அளித்து பேசும் போது, புஸ்வானம் மேலாக பறந்து போகும்போது பார்க்க அழகாகவும், ரம்யமாகவும் இருக்கும். புஸ்வானம் பறக்கும்போது வெளிச்சம் கொடுக்கும். அது மேலே போய் வெடித்த பிறகு கருகிதான் கீழே விழும். அது போன்றுதான் புதிதாக எங்கள் தலைமையில் ஆட்சியை பிடிப்போம் என்று சிலர் கிளம்பியுள்ளனர்.

புஸ்வானம் எப்படி கருகி போனதோ அதுபோன்றுதான் அவர்களது நிலையும் இருக்கும். ஆனால், அதிமுக என்பது என்பது அகல் விளக்கு. அந்த விளக்கு நின்று, நிதானமாக எரியும். நிலைத்து நின்று வெளிச்சம் தரும். அந்த விளக்கு காற்று அடித்தபோது லேசாக அசையதான் செய்யும். அப்படி அசையாமல் இருக்க இரண்டு கரம் வேண்டும். அதில் ஒன்று முதல்வர், மற்றொரு கரம் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம். இந்த இரண்டு கரம் சேர்ந்து அதிமுகவை தாங்கி பிடிக்கும்.

15 நிமிடம் - 108 அறிவிப்பு

சுகாதாரத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் அளித்த பிறகு 108 அறிவிப்புகள் குறித்து பேசினார். அப்போது எம்எல்ஏக்கள் ஊருக்கு செல்ல டிக்கெட் புக் செய்திருக்கிறார்கள். எனவே சீக்கிரம் முடிக்குமாறு சபாநாயகர் கூறினார். அதை தொடர்ந்து மாலை 3.32 மணிக்கு பேச ஆரம்பித்த அமைச்சர் சரியாக 3.47 மணிக்கு தனது பேச்சை முடித்தார். இதை பார்த்த சபாநாயகர் அமைச்சர் விஜயபாஸ்கரை பாராட்டினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • CanadaSyrianChildren

    கனடாவில் உள்ள வீட்டில் பயங்கர தீவிபத்து: ஒரே குடும்பத்தை சேர்நத 7 குழந்தைகள் பலி

  • DroneLanternChina

    ட்ரோன்களைப் பறக்கவிட்டு வித்தியாசமான லாந்தர்ன் விளக்குத் திருவிழா: சீனாவில் நடைபெற்றது

  • AttukalPongalaKerala

    ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் விழா கொண்டாட்டம்: லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்பு

  • mahipoornima

    கும்பமேளாவில் மகி பூர்ணிமா கோலாகலம் : கங்கைக்கு திரண்டு வந்து புனித நீராடிய பக்தர்கள்

  • AeroShowBangalore19

    பெங்களூருவில் ஆசியாவின் மிகப்பெரிய ஏர் ஷோ: ரஃபேல் உள்ளிட்ட கண்கவர் விமானங்கள் சாகசம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்