SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விளையாட்டு துளிகள்....

2018-06-15@ 01:19:53

* அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஆட்டமிழக்காமல் 232 ரன் (145 பந்து) விளாசி மகளிர் கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்திருக்கிறார் நியூசிலாந்தின் அமிலியா கெர். 17 வயதாகும் இவர் ஆஸ்திரேலியாவின் பெலின்டா கிளார்க்கின் (229 ரன், எதிர்: டென்மார்க், 1997) சாதனையை முறியடித்து, அதிக ரன் அடித்த வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார். மேலும், ஒருநாள் போட்டியில் ஆண், மகளிர் இரு பிரிவிலும் மிகக்குறைந்த வயதில் இரட்டை சதம் விளாசியவர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர் ஆகியுள்ளார் அமிலியா (17 வயது, 243 நாள்).
* ரஷ்யாவின் குடும்பம், பெண்கள், சிறுவர்கள் நலத்துறை அமைச்சர் தமாரா பிளட்யோவா அளித்த பேட்டியில், ‘‘உலக கோப்பை கால்பந்து தொடருக்காக சுற்றுலா வரும் வெள்ளையினர் அல்லாதவர்களுடன் ரஷ்ய பெண்கள் பாலியல் உறவு வைத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், பிற்காலத்தில் கலப்பின குழந்தைகளை வளர்ப்பதிலும், ஆதரவில்லாத தாய்மாராகவும் மாறி கஷ்டப்பட வேண்டியிருக்கும்’’ என ரஷ்ய பெண்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
* ஈரானில் அடுத்த மாதம் நடக்க உள்ள சர்வதேச செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து விலகுவதாக இந்திய வீராங்கனை சவுமியா சுவாமிநாதன் அறிவித்துள்ளார். ஈரான் நாட்டு சட்டப்படி அனைத்து வீராங்கனைகளும்  தலையில் ஹிஜாப் அணிந்து போட்டியில் பங்கேற்க வேண்டுமென்ற விதிமுறைக்காகவே விலகுவதாக அவர் கூறியுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 129JawaharlalNehru

    நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 129வது பிறந்தநாள்: அரசியல் தலைவர் மரியாதை

  • 2018TiruvannamalaiDeepam

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது

  • israelfire

    காஸா மீது சரமாரியாக குண்டுவீசிய இஸ்ரேல்: ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடி

  • singaporeasianmodi

    சிங்கப்பூரில் 13வது கிழக்காசிய உச்சி மாநாடு : பிரதமர் மோடி பங்கேற்பு!

  • crowd_thiruchendhuru11

    சூரபத்மனை வதம் செய்தார் சுவாமி ஜெயந்திநாதர் : சூரசம்ஹார நிகழ்ச்சியால் திருச்செந்தூர் விழா கோலம் பூண்டது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்