இங்கிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா பரிதாப தோல்வி
2018-06-15@ 01:18:43

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் பரிதாபமாக தோற்றது. இங்கிலாந்து சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. ‘பந்தை சேதப்படுத்திய சர்ச்சை’க்கு பிறகு புதிய கேப்டன் பெய்னி தலைமையில் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியிருக்கும் முதல் தொடர் இது. லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்த முதல் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்தது. முன்வரிசை பேட்ஸ்மேன்கள் சொதப்ப 47 ஓவரில் 214 ரன்னுக்கு ஆஸ்திரேலியா ஆல் அவுட் ஆனது.
அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 62, அகர் 40 ரன் எடுத்தனர்.
முன்வரிசையில் பிஞ்ச் (19), மார்ஷ் (24), பெய்னி (12) மொயீன் அலி பந்திலும், ஹெட் (5) வில்லி வேகத்திலும், ஸ்டொய்னிஸ் (22) ரஷித் சுழலிலும் விரைவில் விக்கெட்டை பறிகொடுத்தனர். ஆஸ்திரேலிய அணி 90 ரன்னில் முதல் 5 விக்கெட்டை பறிகொடுத்தது குறிப்பிடத்தக்கது.அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து சற்று தடுமாறினாலும், 44 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 218 ரன் எடுத்து வென்றது. கேப்டன் மோர்கன் 69, ஜோ ரூட் 50 ரன் எடுத்து அணிக்கு கைகொடுத்தனர். 3 விக்கெட் கைப்பற்றிய மொயீன் அலி ஆட்ட நாயகன் விருது பெற்றார். 2வது போட்டி கார்டிப்பில் நாளை நடக்கிறது.
மேலும் செய்திகள்
தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி இலங்கை சரித்திர சாதனை
ஹெட்மயர் அதிரடி சதம் 2வது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி
உலக கோப்பை துப்பாக்கிசுடுதல் தங்கம் வென்றார் அபூர்வி
முதல் டி20 போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா இன்று பலப்பரீட்சை
சில்லி பாயின்ட்...
தென் ஆப்பிரிக்கா மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்ததது இலங்கை