SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆப்கனுக்கு எதிராக அசத்தல் ஆரம்பம்; சொதப்பல் ஃபினிஷிங் முதல் நாளில் இந்தியா 347 ரன் குவிப்பு

2018-06-15@ 01:18:00

பெங்களூரு: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியை இந்தியா அதிரடியாக தொடங்கியிருக்கிறது. ஷிகார் தவான், முரளி விஜய் சதம் அடிக்க முதல் நாளிலேயே நமது அணி 6 விக்கெட்டுக்கு 347 ரன் குவித்தது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற ஆப்கானிஸ்தான் அணி, தனது முதல் டெஸ்ட் போட்டியை இந்தியாவுக்கு எதிராக விளையாடுகிறது. வரலாற்று சிறப்புமிக்க இப்போட்டி பெங்களூரு எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. இதில் விராட் கோஹ்லிக்கு ஓய்வளிக்கப்பட்டதால், ரகானே தலைமையில் இந்திய அணி களமிறங்கியது. டாஸ் வென்ற கேப்டன் ரகானே பேட்டிங் தேர்வு செய்தார்.இந்திய அணியில் ஷிகார் தவான், முரளி விஜய் துவக்க வீரர்களாக களமிறங்கினர்.

இந்த ஜோடி ஆப்கானிஸ்தானின் பந்து வீச்சை விளாசித் தள்ளினர். இந்திய அணியை விட பலம் வாய்ந்த சுழற்பந்துவீச்சை ஆப்கானிஸ்தான் கொண்டிருக்கிறது என புகழப்பட்ட நிலையில், அந்த அணியின் சுழற்பந்துவீச்சை தவான் தவிடுபொடியாக்கினார்.  குறிப்பாக, அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் நாயகன் ரஷித்கான் சுழலில் பவுண்டரி, சிக்சர்களை விரட்டினார். இதனால், உணவு இடைவேளைக்கு முன்பாகவே தவான், ஹாட்ரிக் பவுண்டரியுடன் சதம் அடித்து புதிய சாதனை படைத்தார்.முதல் விக்கெட்டுக்கு 168 ரன் சேர்த்த நிலையில், தவான் 96 பந்தில் 107 ரன் (3 சிக்சர், 19 பவுண்டரி) எடுத்து யாமின் அகமத்ஸாய் வேகத்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கே.எல்.ராகுல் நல்ல ஒத்துழைப்பு தர முரளி விஜய்யும் சதத்தை நெருங்கினார். அப்போது மழை குறுக்கிடவே ஒரு மணி நேர ஆட்டம் தடைபட்டது. தொடர்ந்து முரளிவிஜய் டெஸ்டில் தனது 12வது சதத்தை பூர்த்தி செய்தார்.

ராகுல் அரைசதம் கடந்தார். 105 ரன் சேர்த்த நிலையில் முரளி விஜய், வாபதார் பந்தில் வெளியேற, அகமத்ஸாயின் அடுத்த ஓவரில் ராகுலும் (54) ஆட்டமிழந்தார்.இதன் பின் ரன் வேகம் குறையத் தொடங்கிய நிலையில், அடுத்து களமிறங்கிய ரகானே வெறும் 10 ரன்னில் ரஷித்கான் சுழலில் நடையை கட்டினார். புஜாரா 35 ரன்னில் முஜீப் உர் ரகுமான் சுழலில் வெளியேறினார். தினேஷ் கார்த்தி (4) ரன் அவுட்டாகி ஏமாற்றினார். ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 78 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 347 ரன்களை குவித்துள்ளது. ஹர்திக் பாண்டியா 10, அஷ்வின் 7 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர். இன்று 2ம் நாள் ஆட்டம் நடக்க உள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-02-2019

  24-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-02-2019

  23-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • chennai_pkankatchui1

  சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!

 • israelmoonshuttle

  சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை

 • chennai_laksh1

  திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்