SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நீதிமன்றத்தின் தயவால் மக்கள் விரோத ஆட்சிக்கு 2 முதல் 3 மாதங்கள் ஆயுள் நீடித்து இருக்கிறது : டிடிவி.தினகரன் கருத்து

2018-06-15@ 01:17:59

சென்னை: “நீதிமன்றத்தின் தயவால் மக்கள் விரோத ஆட்சிக்கு 2 முதல் 3 மாதங்கள் ஆயுள் நீடித்து இருக்கிறது” என்று டிடிவி.தினகரன் கூறியுள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் சென்னையில் நேற்று அளித்த பேட்டி: 18 எம்.எல்.ஏ.க்கள் எங்கள் கூடவே இருக்கிறார்கள். ஆளுங்கட்சியினருடன் அவர்கள் இருந்திருந்தால் நிறைய சலுகைகள் கிடைத்திருக்கும்.  நானே போக சொன்னால் கூட என்னைவிட்டு அவர்கள் போக மாட்டார்கள். இதுதான் உண்மை.

ஐகோர்ட்டில் ஒரு நீதிபதி சபாநாயகரின் தீர்ப்பு செல்லாது என்றும், தலைமை நீதிபதி சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்றும் சொல்கிறார்கள். இதே கோர்ட்டில்தான் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு புதுச்சேரி சபாநாயகர் தீர்ப்பை நிராகரித்தார். அது எனக்கு புரியவில்லை. புதுச்சேரி மாநிலத்துக்கு ஒரு சட்டம், தமிழகத்துக்கு ஒரு சட்டம் என்பது கடவுளுக்குதான் வெளிச்சம். 2 நீதிபதிகளும் ஒரே தீர்ப்பை எங்களுக்கு எதிராக தந்திருந்தாலும், நாங்கள் உச்ச நீதிமன்றம் சென்று வென்று இருப்போம்.

நீதிமன்றத்தின் தயவினால் மக்கள் விரும்பாத, மக்கள் விரோத ஆட்சிக்கு 2 முதல் 3 மாதங்கள் ஆயுள் நீடித்து இருக்கிறது. நீதிமன்றத்தின் தீர்ப்பு மீது மக்களுக்கு கேள்விக்குறி எழுகிறது. சாதாரண மனிதனாக எனக்கும் அதே சந்தேகம் இருக்கிறது. இந்த தீர்ப்பு மூலம் எங்களுக்கு 50 சதவீதம் வெற்றி கிடைத்து இருக்கிறது.  18 எம்.எல்.ஏ.க்களும் எடுக்கும் முடிவுக்கு நான் உடன்படுவேன். 3வது நீதிபதியின் தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக இருந்தால் நம்பிக்கை வாக்கெடுப்பு வேண்டும் என்று சொல்வேன். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-06-2018

    24-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • kmkharippastatue

    சென்னையில் இந்திய ராணுவத்தின் முதல் தலைமைத் தளபதி கே.எம்.கரியப்பாவின் சிலை திறப்பு!

  • Stalinarrestvolunteersstirstir

    தி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது: தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலை மறியல்

  • president_kovindh_cuba123

    கியூபாவில் உள்ள பிடல் காஸ்ட்ரோ மற்றும் ஜோஸ் மார்டி நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மரியாதை!

  • RePlantingCanada

    அழிந்துவரும் காடுகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கனடா நாட்டு மக்கள்: வருவாயும் கிடைப்பதால் மகிழ்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்