SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னையில் முதல்முறையாக மகளிர் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது

2018-06-15@ 01:14:55

சென்னை: மகளிர் கிரிக்கெட்டை மேம்படுத்தும் நோக்கில், இந்தியன் வங்கி டிராபிக்கான டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் சென்னையில் இன்று தொடங்குகிறது. மகளிர் கிரிக்கெட் போட்டிகளை மேம்படுத்த தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம், இந்தியன் வங்கியுடன் இணைந்து  ஐபிஎல், டிஎன்பிஎல் போன்று  மகளிருக்கான கிரிக்கெட் போட்டிகளை நடத்துகிறது. அதன்படி மகளிருக்கான ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் இன்று  முதல் ஜூன் 30ம் தேதி வரையிலும், டி20 கிரிக்கெட் போட்டிகள் ஜூன் 16 முதல் ஜூன் 28ம் தேதி வரை நடைபெறும். இந்தப் போட்டிகளில்  யெல்ேலா சேலஞ்சர்ஸ், ரெட் ரேஞ்சர்ஸ், ஒயிட் வாரியர்ஸ்,  புளூ அவேஞ்சர்ஸ், கிரீன் இன்வடர்ஸ், சில்வர் ஸ்டிரைகர்ஸ் என 6 அணிகள் பங்கேற்கின்றன.  போட்டிகள் சிபிடி ,கிண்டி பொறியியல் கல்லூரி, சேத்பட்,  காந்திநகர் உட்பட பல்வேறு இடங்களில் நடைபெறுகின்றன.

முதல்நாளான இன்று நடைபெறும் ஒருநாள் போட்டிகளில்  யெல்லோ சேலஞ்சர்ஸ் - ரெட் ரேஞ்சர்ஸ்,  ஒயிட் வாரியர்ஸ்- புளூ அவேஞசர்ஸ்,  கிரீன் இன்வடர்ஸ்- சில்வர் ஸ்ட்ரைகர்ஸ் ஆகிய அணிகள் மோத உள்ளன. அடுத்த ஒரு நாள் போட்டிகள் ஜூன் 15, 18, 21, 24, 27, 30 ஆகிய தேதிகளில் நடைபெறும். இறுதிப் போட்டி ஜூன் 30ம் தேதி நடைபெறும்.நாளை தொடங்கும் டி20 போட்டியில் இதே அணிகள் மீண்டும் மோதும். ெதாடர்ந்து  டி20 போட்டிகள் ஜூன் 19, 22, 25, 28 ஆகிய தேதிகளில் நடைபெறும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-11-2018

    16-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • gslvrocket

    ஜிசாட் 29 செயற்கைகோளை சுமந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி மார்க்3-டி2 ராக்கெட்

  • 15-11-2018

    15-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 129JawaharlalNehru

    நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 129வது பிறந்தநாள்: அரசியல் தலைவர் மரியாதை

  • 2018TiruvannamalaiDeepam

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்