SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

போர்ச்சுகல்-ஸ்பெயின் இன்று பலப்பரீட்சை

2018-06-15@ 01:12:47

சோச்சி: உலக கோப்பை கால்பந்து தொடரில் இன்று நடக்கும் லீக் போட்டியில் ஸ்பெயின், போர்ச்சுகல் ஆகிய இரு பலம் வாய்ந்த அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. பிபா உலக கோப்பை கால்பந்து தொடரில் இன்று 3 லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. ஏ பிரிவில் எகிப்து-உருகுவே அணிகளும், பி பிரிவில் மொராக்கோ-ஈரான் அணிகளும், போர்ச்சுகல்-ஸ்பெயின் அணிகளும் மோதுகின்றன. இதில், போர்ச்சுகல்-ஸ்பெயின் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆவலை ஏற்படுத்தி உள்ளது. இரு அணிகளுமே பலம் வாய்ந்தவை. 2014 உலக கோப்பையில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய ஸ்பெயின் அணி லீக் சுற்றிலேயே வெளியேறி அதிர்ச்சி தோல்வி அடைந்தது. அதற்கு ஈடாக இம்முறை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் உறுதியுடன் அந்த அணி வீரர்கள் உள்ளனர். இஸ்கோ, அசென்சியோ போன்ற நட்சத்திர வீரர்கள் உள்ளதால் அந்த அணி நம்பிக்கையுடன் உள்ளது. கோல் கீப்பர் டேவிட் டி ஜியா நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறார்.

அதே நேரத்தில் முதல் போட்டி தொடங்கும் முன்பாகவே, அணியின் பயிற்சியாளர் லோபடிகுயி பதவியிலிருந்து நீக்கப்பட்டது சர்ச்சையாகி உள்ளது. நிர்வாக திறமை கொண்டவரான ஹியர்ரோ ஸ்பெயினின் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இது அணிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.
போர்ச்சுகலை பொறுத்த வரையில், கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ மிகப்பெரிய பலம். 2016ல் ஐரோப்பிய சாம்பியனான அந்த அணி, இம்முறை உலக கோப்பையை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படும் அணிகளில் ஒன்றாக திகழ்கிறது. அதே நேரத்தில், ரொனால்டோவை மட்டுமே நம்பி போர்ச்சுகல் இல்லை என்பதையும் 2016 யூரோ தொடர் இறுதிப் போட்டியில் அந்த அணி நிரூபித்தது. காயம் காரணமாக ரொனால்டோ இல்லாமல் களமிறங்கிய போர்ச்சுகம் கோப்பை வென்றது குறிப்பிடத்தக்கது. எனவே சமபலம் பொருந்திய அணிகள் மோதும் இப்போட்டி ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும். இந்திய நேரப்படி இப்போட்டி இரவு 11.30 மணிக்கு தொடங்குகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-11-2018

    16-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • gslvrocket

    ஜிசாட் 29 செயற்கைகோளை சுமந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி மார்க்3-டி2 ராக்கெட்

  • 15-11-2018

    15-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 129JawaharlalNehru

    நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 129வது பிறந்தநாள்: அரசியல் தலைவர் மரியாதை

  • 2018TiruvannamalaiDeepam

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்