SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ராஜஸ்தானில் அதிர்ச்சி பழைய பேப்பர் கடையில் 2 ஆயிரம் ஆதார் கார்டுகள்

2018-06-15@ 01:09:01

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் பழைய பேப்பர் கடைக்கு விற்கப்பட்ட மூட்டையில் 2 ஆயிரம் ஆதார் கார்டுகள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் ஜலுபுரா பகுதியை சேர்ந்தவர் இம்ரான். பழைய பேப்பர்களை வாங்கும் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் சமீபத்தில் பழைய பேப்பர்கள் ஒரு மூட்டையில் கட்டி விற்பனை கொண்டு வரப்பட்டது. அதை வாங்கிய இம்ரான், நேற்று மூட்டையை பிரித்த இம்ரான் அதிர்ச்சி அடைந்தார். காரணம், அதில் 2 ஆயிரம் ஆதார் கார்டுகள் இருந்தன. இது குறித்து இம்ரான் உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவித்தார். மேலும், தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்பு துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக போலீசார் கூறுகையில், “ஆதார் கார்டுகள் ஒரு பார்சலாக உள்ளன. இவை தபால் நிலையத்தில் விநியோகம் செய்வதற்காக கொண்டு வரப்பட்டு இருக்கலாம். தவறுதலாக இங்கு வந்துள்ளது. இது குறித்து தபால் நிலைய அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் கார்டுகள் எப்படி பழைய பேப்பர் மூட்டைக்குள் வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்படும்” என்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-06-2018

    23-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennai_protest123

    நீட் தேர்வில் நிரந்தர விலக்கு கோரி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயற்சி: மாணவர்கள் கைது

  • cleanesttrainPurityIndia

    ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் தூய்மை ரயில் - தூய்மை இந்தியா

  • fifa_fans123

    உலகக் கோப்பை கால்பந்து போட்டி: முகத்தில் வர்ணம் பூசி உற்சாகமாக கண்டுகளிக்கும் ரசிகர்கள்!

  • whatsapp_police11

    வாட்ஸ் அப் வதந்திகளை நம்பாதீர் : தண்டோரா போட்டு பிரச்சாரம் செய்யும் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு சல்யூட்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்