SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஓ... இதுக்கு பேருதான் ரிசர்வேசனா? 3013ம் ஆண்டுக்கு டிக்கெட் கொடுத்து ரூ.800 அபராதம் வசூலித்த ரயில்வே

2018-06-15@ 01:07:56

லக்னோ: பராசக்தி படத்தில் வரும் “இந்த நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளை சந்தித்திருக்கிறது” என்ற வசனத்தை தெரியாதவர்கள் இருக்க முடியாது. உத்தரப் பிரதேச மாநில ரயில் நிலையத்தில் நடந்த சம்பவம் ஒன்று இதை மீண்டும் நினைவுப்படுத்தி இருக்கிறது. 2013ம் ஆண்டு என்பதற்கு பதிலாக 3013ம் ஆண்டு என்று பதிவிட்டு வழங்கப்பட்ட ரயில் டிக்கெட் தான் இந்த விசித்திர வழக்குக்கு காரணம். உத்தரப் பிரதேச மாநிலம், சஹரன்பூரை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற பேராசிரியர் விஷ்ணு காந்த் சுக்லா. இவர், கடந்த 2013ம் ஆண்டு கன்னுஜ் ரயில்வே நிலையத்தில் ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்தார். அதில், 2013ம் ஆண்டு என்பதற்கு பதிலாக தவறுதலாக 3013 என்று அச்சிடப்பட்டு இருந்தது. இந்த டிக்கெட்டில் சுக்லா பயணம் செய்தார்.

அப்போது, டிக்கெட்டை பரிசோதனை செய்த பரிசோதகர் அதில் 3013 என்று அச்சிடப்பட்டுள்ளது என்றும், அது போலி டிக்கெட் என்றும் கூறியுள்ளார். சுக்லா எவ்வளவோ எடுத்துக்கூறியும் ஏற்காத பரிசோதகர், ரூ.800 அபராதம் வசூலித்தார். அதுமட்டுமின்றி, அடுத்த ரயில் நிலையத்தில் சுக்லா இறக்கியும் விடப்பட்டுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சுக்லா, உத்தரப் பிரதேச நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த 5 ஆண்டுகளாக நடந்து வந்தது.சுக்லாவை மனஉளைச்சலுக்கு ஆளாக்கியதற்காக ரூ.10 ஆயிரம் இழப்பீடும், வழக்கு செலவிற்காக ரூ.3 ஆயிரமும் வழங்கும்படி ரயில்வே துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பு திருப்தி அளிப்பதாக சுக்லா தெரிவித்துள்ளார். 70 வயதான போதிலும் தளராமல் தவறை தட்டிக்கேட்ட சுக்லாவை அனைவரும் பாராட்டி உள்ளனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-06-2018

    23-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennai_protest123

    நீட் தேர்வில் நிரந்தர விலக்கு கோரி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயற்சி: மாணவர்கள் கைது

  • cleanesttrainPurityIndia

    ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் தூய்மை ரயில் - தூய்மை இந்தியா

  • fifa_fans123

    உலகக் கோப்பை கால்பந்து போட்டி: முகத்தில் வர்ணம் பூசி உற்சாகமாக கண்டுகளிக்கும் ரசிகர்கள்!

  • whatsapp_police11

    வாட்ஸ் அப் வதந்திகளை நம்பாதீர் : தண்டோரா போட்டு பிரச்சாரம் செய்யும் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு சல்யூட்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்