SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கேரளாவில் நிலச்சரிவில் 6 பேர் பலி

2018-06-15@ 01:01:52

திருவனந்தபுரம்: கோழிக்கோட்டில் நேற்று அதிகாலை ஏற்பட்ட  நிலச்சரிவில் 6 பேர் பரிதாபமாக இறந்தனர். திருச்சூரில் மரக்கிளை முறிந்து  விழுந்து ஒருவர் இறந்தார்.கேரளாவில் திருவனந்தபுரம், கொல்லம்,  எர்ணாகுளம், கோழிக்கோடு, மலப்புரம், இடுக்கி, கண்ணூர் ஆகிய மாவட்டங்களில்  கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த  நிலையில் கோழிக்கோடு தாமரச்சேரி, மலப்புரம் மாவட்டம் எடவண்ணா, கரிஞ்சோலை,  காரசேரி ஆகிய இடங்களில் நேற்று அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டது.இதில்  வீடுகள் மண்ணுக்கு அடியில் புதைந்தன. இதில் தாமரச்சேரி பகுதியைச் சேர்ந்த  அப்துல் சலீம் மகள் பில்னா (9), அவரது தம்பி முகமது ஷஹபாஸ் (3), இவர்களது  உறவினர் ஜாபர் மகன் முகம்மது ஜாசிம் (5), அப்துல் ரகுமான் (60), ஹசன்,  இவரது மகள் ஹன்னத் ஆகிய 6 பேர் பரிதாபமாக இறந்தனர்.

இதுகுறித்து தகவல்  அறிந்ததும் தாமரச்சேரி போலீசார் மற்றும் பேரிடர் மீட்பு சிறப்பு படையினர்  விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
திடீர் நிலச்சரிவால்  கோழிக்கோடு - வயநாடு இடையே சாலை போக்குவரத்து முற்றிலுமாக  துண்டிக்கப்பட்டது. திருச்சூரில் பெய்த கனமழையில் மரக்கிளை முறிந்து விழுந்து கொடுங்கல்லூரை சேர்ந்த  சுரேஷ் (55)  இறந்தார்.இதற்கிடையே  இன்றும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதையடுத்து  அனைத்து மாவட்ட கலெக்டர்களும் உஷாராக இருக்க வேண்டுமென மாநில அரசு  அறிவுறுத்தி உள்ளது. மேலும் இரவு நேரங்களில் சுற்றுலாப் பயணிகள் உள்பட  மலையோர பகுதிகளுக்கோ, கடற்கரைக்கோ செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக்  கொள்ளப்பட்டனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 3rdthiruvanamalai

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவம்: பூத வாகனத்தில் சந்திரசேகரர் பவனி

  • pudukottaikaja

    கஜா புயல் எதிரொலி : புதுக்கோட்டையில் பலத்த காற்று மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள்

  • NagaiGajaStorm

    நாகை மாவட்டத்தை கதிகலங்கவைத்த கஜா புயலின் ருத்ரதாண்டவம்: உருக்குலைந்து கிடக்கும் நகரம்!

  • kajarainhome

    புரட்டி போட்ட கஜா புயல் : மரங்கள், வீடுகள், மின் கம்பங்கள் சேதம்

  • sriramayanatrain

    புறப்பட்டது ஸ்ரீ ராமாயண எக்ஸ்பிரஸ் : புண்ணிய தலங்களில் 16 நாட்கள் சுற்றுலாப் பயணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்