SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஏற்றுமதி தேயிலைத்தூள் விற்பனை அதிகரிப்பு

2018-06-15@ 01:00:53

கோவை:கோவை தேயிலை வர்த்தக மையத்தில் நேற்று முன்தினம் மாலை நடந்த ஏலத்தில் 2.80 கோடிக்கு தேயிலை விற்பனையானது. கோவை தேயிலை வர்த்தக மையத்தில் புதன் தோறும் ஆன்லைனில் தேயிலைத்தூள் விற்பனை நடக்கிறது. நேற்று முன்தினம் மாலை நடந்த ஏலத்தில் உள்ளூர் ரகம் (டஸ்ட்) 2.71 லட்சம் கிலோ விற்பனைக்கு வந்தது. இதில் 1.94 லட்சம் கிலோ விற்பனையானது. சராசரி விற்பனை விலை கிலோ 93.16. விற்பனை மதிப்பு 1.82 கோடி. ஏற்றுமதி ரகம்(லீப்) 1.46 லட்சம் கிலோ விற்பனைக்கு வந்தது. இதில் 1.13 லட்சம் கிலோ விற்பனையானது. சராசரி விற்பனை விலை கிலோ 86.46. விற்பனை மதிப்பு 98 லட்சம்.

கடந்த வார விற்பனையோடு ஒப்பிடுகையில், உள்ளூர் ரகம் கிலோவுக்கு 48 பைசா அதிகரித்துள்ளது. ஏற்றுமதி ரகம் கிலோவிற்கு 4.79 குறைந்துள்ளது. மொத்தத்தில் உள்ளூர் மற்றும் ஏற்றுமதி ரக தேயிலைத்தூள் 2.80 கோடிக்கு விற்றுள்ளது. இது கடந்த வாரத்தை விட 27 லட்சம் குறைவாகும். விற்பனை சரிவிற்கு ஏற்றுமதி தேயிலைத்தூள் வரத்தும், விற்பனையும் அதிகரித்துள்ளதால் விலை சரிந்துள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chennai_pkankatchui1

    சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!

  • israelmoonshuttle

    சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை

  • chennai_laksh1

    திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா

  • chinadance

    சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்

  • Autoshow2019

    கனடாவில் சர்வதேச ஆட்டோ ஷோ 2019: முன்னணி நிறுவனங்களின் கிளாசிக் கார்கள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்