SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

யுனிசெப் ஆய்வில் தகவல்: குழந்தையை வளர்க்க தந்தைக்கு விடுமுறை இந்தியா உள்ளிட்ட 90 நாடுகள் மறுப்பு

2018-06-15@ 01:00:26

நியூயார்க்: குழந்தைகளை வளர்க்க தந்தைக்கு வழங்கப்பட வேண்டிய சம்பளத்துடன் கூடிய விடுமுறையை இந்தியா உள்ளிட்ட 90 நாடுகள் வழங்க மறுப்பது யுனிசெப் ஆய்வில் தெரியவந்துள்ளது. அரசு அதிகாரிகளாக பணியாற்றும் கர்ப்பிணிகளுக்கு பேறுகால விடுமுறை வழங்கப்படுகிறது. இது போல் குழந்தைகளை வளர்க்க தந்தைக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும். இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் வளர்ப்பு தொடர்பான யுனிசெப் அமைப்பு சமீபத்தில் ஆய்வு ஒன்றை நடத்தியது. இதில் இந்தியா உள்பட 90 நாடுகள் புதிதாக பிறந்த குழந்தைகளை வளர்க்க அதன் தந்தைக்கு பேறுகால விடுமுறை வழங்கப்படுவதில்லை என கண்டறிந்துள்ளது.

இது தொடர்பாக யுனிசெப் அமைப்பு கூறியுள்ளதாவது: உலகத்தில் 9 கோடி அளவுக்கு ஒரு வயதுக்கும் உட்பட்ட குழந்தைகள் உள்ளனர். இவர்களது தந்தைகளுக்கு ஒரு நாள் கூட சம்பளத்துடன் கூடிய விடுமுறையை இந்தியா உள்ளிட்ட 90 நாடுகள் வழங்கவில்லை. இதிலும் இந்தியா மற்றும் நைஜீரியா நாடுகளில் அதிகளவு குழந்தைகள் உள்ளனர். இந்த நாடுகள் உள்பட 92 நாடுகளில் குழந்தை வளர்ப்பின் போது தந்தைக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக தனியாக தேசிய அளவிலான கொள்கைகள் இல்லை. இந்தியாவில் அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது தந்தைக்கு பேறுகால விடுமுறையாக 3 மாதம் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிப்பதற்கான வரைவு மசோதாவை தாக்கல் செய்ய உள்ளது.

குறிப்பாக ஐநா சபை உள்ள அமெரிக்காவிலும் 40 லட்சம் குழந்தைகள் உள்ளன. அங்கும் பேறுகால விடுமுறை அல்லது தந்தைக்கு விடுமுறை வழங்கப்படுவதில்லை. அதே நேரத்தில் அதிக குழந்தைகள் உள்ள பிரேசில் மற்றும் காங்கோவில் தந்தைக்கு பேறுகால விடுறை வழங்குவதற்கான கொள்கை உள்ளது.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இது தொடர்பாக யுனிசெப் நிர்வாக இயக்குனர் ெஹன்ரிட்டா போர் கூறுகையில், `குழந்தை வளர்ப்பு தொடர்பாக தந்தை மற்றும் தாய்க்கு இடையே அர்த்தமுள்ள கலந்துரையாடல் நடத்துவதற்கும், பிறந்த குழந்தைகளின் மூளை வளர்ச்சியடையவதற்கும், குழந்தைகள் மகிழ்ச்சியாக மற்றும் ஆரோக்கியத்துடன் வளர்வதற்கும் இந்த விடுமுறை உதவும்’ என்றார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-06-2018

    23-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennai_protest123

    நீட் தேர்வில் நிரந்தர விலக்கு கோரி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயற்சி: மாணவர்கள் கைது

  • cleanesttrainPurityIndia

    ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் தூய்மை ரயில் - தூய்மை இந்தியா

  • fifa_fans123

    உலகக் கோப்பை கால்பந்து போட்டி: முகத்தில் வர்ணம் பூசி உற்சாகமாக கண்டுகளிக்கும் ரசிகர்கள்!

  • whatsapp_police11

    வாட்ஸ் அப் வதந்திகளை நம்பாதீர் : தண்டோரா போட்டு பிரச்சாரம் செய்யும் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு சல்யூட்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்