ஆதார் அட்டையில் முகத்தை அடையாளம் காணும் வசதி அறிமுகம் தாமதம்
2018-06-15@ 00:59:34

புதுடெல்லி: ஆதார் அட்டையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட உள்ள முகத்தை அடையாளம் காணும் வசதி மேலும் ஒரு மாதம் தாமதமாகும்.
தேசிய அடையாள அட்டையான ஆதார் அட்டை உதவியுடன் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன. இந்த அட்டை வழங்கும் பணியை உதய் என்ற அமைப்பு செயல்படுத்தி வருகிறது. இந்தியாவில் 121.17 கோடி பேர் ஆதார் அட்டை பெற்றுள்ளனர். இந்த அட்டையில் சம்மந்தப்பட்ட நபரின் கைரேகை, கருவிழி ஆகியவை இடம் பெற்றுள்ளது. இதில் வயதானவர்கள், கடின உழைப்பாளிகள் உள்ளிட்டோருக்கு கைரேகை அழிந்து காணப்படுவதால் அவர்களின் அடையாளத்தை சரிபார்ப்பது சிரமமாக உள்ளதாக புகார் கூறப்பட்டது. இதனால் உதய் அமைப்பு, முகத்தை அடையாளம் காணும் வசதியும் கூடுதலாக அறிமுகப்படுத்தப்படும் என்று இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிவித்தது.
இந்த திட்டம் வரும் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் எனவும் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் இந்த புதிய வசதியை அறிமுகம் செய்ய கூடுதல் கால அவகாசம் தேவை என்பதால் இந்த வசதி அறிமுகப்படுத்துவது தாமதமாகும் என உதய் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி அஜய் பூஷன் பாண்டே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: ஆதார் அடையாள அட்டையில் முகத்தை அடையாளம் காணும் புதிய முறையை சிறப்பானதாக தர விரும்புகிறோம். புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதால் ஏற்கனவே அறிவித்த காலத்திற்குள் அறிமுகப்படுத்த முடியாத நிலை உள்ளது. ஆகஸ்ட் 1ம் தேதி முதல் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் செய்திகள்
பிஎப் வட்டி விகிதம் திடீர் உயர்வு ... தேர்தல் வந்தாலே பாசம் பத்திக்கும்
தங்கம் விலையில் திடீர் மாற்றம் : ஒரே நாளில் சவரன் ரூ.136 குறைந்தது
ஐசிஐசிஐ முன்னாள் சிஇஓ.க்கு சிபிஐ ‘லுக் அவுட்’ நோட்டீஸ்
பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு விஆர்எஸ் திட்டம் ரெடி : இதுவரை இல்லாத அளவு தொகை கிடைக்கும்
9 நாள் சரிவுக்கு பிறகு பங்குச்சந்தை 2வது நாளாக ஏற்றம்
தொழிலாளர்களுக்கான பி.எஃப் வட்டி விகிதம் 8.55%லிருந்து 8.65%ஆக உயர்வு
சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!
சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை
திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா
சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்
கனடாவில் சர்வதேச ஆட்டோ ஷோ 2019: முன்னணி நிறுவனங்களின் கிளாசிக் கார்கள் பங்கேற்பு