SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ராஜ் தாக்கரே 50வது பிறந்தநாள்: மும்பையில் இரு சக்கர வாகனங்களுக்கு 4 ரூபாய் தள்ளுபடியில் பெட்ரோல்

2018-06-15@ 00:59:11

மும்பை: மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரேயின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று அவரது கட்சியினர் மார்க்கெட் விலையை விட 4 ரூபாய் குறைவாக பொதுமக்களுக்கு பெட்ரோல் விநியோகம் செய்தனர். ராஜ் தாக்கரேக்கு நேற்று 50வது பிறந்தநாள். அவரது பிறந்தநாளை சிறப்பு தினமாக கடைபிடிக்கப் போவதாக மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா கட்சி நிர்வாகிகள் ஏற்கனவே அறிவித்திருந்தனர். அதன்படி பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு நூதனமான முறையில் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அந்த கட்சியினர் நேற்று மார்க்கெட் விலையை விட 4 ரூபாய் குறைவாக பெட்ரோலை பொதுமக்களுக்கு விநியோகம் செய்தனர்.

மும்பையில் உள்ள 36 பெட்ரோல் பங்க்குகள் உட்பட மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளில் மொத்தம் 48 பெட்ரோல் பங்க்குகளில் 4 ரூபாய் குறைவாக பெட்ரோல் விநியோகம் செய்ய அந்த கட்சியினர் ஏற்பாடு செய்திருந்தனர். இந்த சலுகை இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு மட்டும் அளிக்கப்பட்டது. இதன் காரணமாக விலையில் சலுகை அளித்த 48 பெட்ரோல் பங்க்குகளிலும் ஏராளமான இரு சக்கர வாகன ஓட்டிகள் நேற்று காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் வாகனங்களில் பெட்ரோல் நிரப்பி கொண்டனர். விலை சலுகையை பயன்படுத்தி பெரும்பாலான இரு சக்கர வாகன ஓட்டிகள் தங்கள் பைக்கின் பெட்ரோல் டேங்கை முழுவதுமாக நிரப்பி கொண்டனர். இது குறித்து சாகர் என்ற இரு சக்கர வாகன ஓட்டி ஒருவர் கூறுகையில், ‘‘பெட்ரோல் விலை உயர்வால் கடந்த சில மாதங்களாக கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறோம். இப்போதுதான் முதல் முறையாக எனது பைக்கின் பெட்ரோல் டேங்கை முழுமையாக நிரப்பியிருக்கிறேன். ராஜ் தாக்கரே பெட்ரோல் விலையில் சலுகை அளித்தது போல பிரதமர் மோடியும் பெட்ரோல், டீசல் விலையை குறைப்பார் என்று எதிர்பார்க்கிறோம். அப்படி செய்தால் என்னை போன்ற குறைந்த சம்பளம் வாங்குவோருக்கு நிம்மதியாக இருக்கும்’’ என்றார்.

மகாராஷ்டிராவில் நேற்று பெட்ரோல் விலை 84.26 ஆக இருந்தது. விலை சலுகை அளிக்கப்பட்ட ஒவ்வொரு பெட்ரோல் பங்க்குகளிலும் ராஜ் தாக்கரே கட்சியினர் இருந்தனர். இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு எவ்வளவு பெட்ரோல் போடப்பட்டது என்பதை அவர்கள் இறுதியில் கணக்கு பார்த்து 4 ரூபாய் விலை வித்தியாசத்துக்குரிய தொகையை பெட்ரோல் பங்க் மேலாளரிடம் கொடுத்தனர். இதுபற்றி கட்சி நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘‘காலை 8 மணி முதல் மதியம் வரை குறிப்பிட்ட 48 பெட்ரோல் பங்க்குகளில் பெட்ரோலுக்கு விலை சலுகை அளிக்கப்பட்டது. மும்பையில் உள்ள சிவ்ரி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட பகுதியில் மட்டும் 8 ரூபாய் குறைவாக பெட்ரோல் விநியோகிக்கப்பட்டது’’ என்றார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-06-2018

    24-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • kmkharippastatue

    சென்னையில் இந்திய ராணுவத்தின் முதல் தலைமைத் தளபதி கே.எம்.கரியப்பாவின் சிலை திறப்பு!

  • Stalinarrestvolunteersstirstir

    தி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது: தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலை மறியல்

  • president_kovindh_cuba123

    கியூபாவில் உள்ள பிடல் காஸ்ட்ரோ மற்றும் ஜோஸ் மார்டி நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மரியாதை!

  • RePlantingCanada

    அழிந்துவரும் காடுகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கனடா நாட்டு மக்கள்: வருவாயும் கிடைப்பதால் மகிழ்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்