SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தலைமை நிதி அதிகாரி பதவி ஜெனரல் மோட்டார்சில் தமிழக பெண் நியமனம்

2018-06-15@ 00:58:27

ஹூஸ்டன்: தமிழகத்தை சேர்ந்த பெண், ஜெனரல் மோட்டார்சின் தலைமை நிதி அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆட்டோமொபைல் துறையில் இந்த பதவியில் அமர்த்தப்படும் முதல் பெண் இவர். அமெரிக்காவை சேர்ந்த ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக சக் ஸ்டீவன் உள்ளார். இந்த பதவியில், ஜெனரல் மோட்டார்சின் கார்ப்பொரேட் நிதி பிரிவு துணை தலைவராக உள்ள திவ்யா சூர்யதேவரா நியமிக்கப்ட்டுள்ளார். வரும் செப்டம்பர் 1ம் தேதி தலைமை நிதி அதிகாரியாக பதவியேற்கிறார் என, ஜெனரல் மோட்டார்ஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

39 வயதான திவ்யா சூர்யதேவரா, சென்னையில் பிறந்தவர். சென்னை பல்கலைக்கழகத்தில் பி.காம், எம்.காம் படித்தார். 22 வயதில், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படிக்க அமெரிக்கா சென்றார். அமெரிக்காவில் நிதி ஆலோசகர் உள்ளிட்ட பணிகளில் பிற நிறுவனங்களில் பணியாற்றிய இவர், ஜெனரல் மோட்டார்சில் 2005ம் ஆண்டு சேர்ந்தார். 2017 ஜூலையில் இருந்து ஜெனரல் மோட்டார்சின் கார்ப்பொரேட் பைனான்ஸ் துணை தலைவராக உள்ளார். இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உள்ள மேரி பர்ரா உள்ளார். ஆட்டோமொபைல் துறையில் இந்தகைய உயர் பதவியில் உள்ள பெண்கள் இவர்கள் இருவர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-11-2018

    16-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • gslvrocket

    ஜிசாட் 29 செயற்கைகோளை சுமந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி மார்க்3-டி2 ராக்கெட்

  • 15-11-2018

    15-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 129JawaharlalNehru

    நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 129வது பிறந்தநாள்: அரசியல் தலைவர் மரியாதை

  • 2018TiruvannamalaiDeepam

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்