SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

யுடிஎஸ் மொபைல் ஆப்சில் முன்பதிவில்லாத ரயில் டிக்கெட் எடுக்க, ரத்து செய்ய வசதி

2018-06-15@ 00:57:58

புதுடெல்லி: யுடிஎஸ் மொபைல் ஆப்சில், முன்பதிவு இல்லாத ரயில் டிக்கெட் எடுக்க மற்றும் ரத்து செய்யும் வசதியை ரயில்வே அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பணமற்ற பரிவர்த்தனைகளுக்காக யுடிஎஸ் ஆன் மொபைல் என்ற ஆப்ஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில்,  முன்பதிவில்லாத ரயில் டிக்கெட் எடுக்கவும், அதை ரத்து செய்யவும் முடியும்.
இதுபோல், மாதாந்திர சிறப்பு சலுகை டிக்கெட்கள் எடுப்பது, புதுப்பிப்பது, பிளாட்பார்ம் டிக்கெட் எடுப்பது ஆகியவையும் இந்த ஆப்சில் உள்ளன.
ஆன்டிராய்டு மொபைல் வைத்திருப்பவர்கள் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து இதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தங்கள் பெயர், மொபைல் எண், முகவரி ஆகியவற்றை பதிவு செய்து டிக்கெட்களை எடுத்துக்கொள்ளலாம். ரயில்வே வாலட் மூலமாகவும் இதில் பணம் செலுத்தலாம். மொபைலில் இணைய வசதி இருந்தால் மட்டுமே டிக்கெட் எடுக்க முடியும். ஜிபிஎஸ் வசதியும் இருக்கவேண்டும்.

பயண நாள் அன்று டிக்கெட் எடுத்து, ஒரு மணி நேரத்துக்குள் பயணத்தை தொடங்கியிருக்க வேண்டும். தாள்களற்ற முறையில் மொபைலில் உள்ள டிக்கெட்டை காட்டி பயணம் செய்யலாம். மொபைலில் இணைய இணைப்பு இல்லாவிட்டால், அல்லது மொபைல் சார்ஜ் இல்லாமல் அணைந்திருந்தால் டிக்கெட் எடுக்காதவராகவே அந்த பயணி கருதப்படுவார். அதேநேரத்தில், இந்த ஆப்ஸ் மூலம் டிக்கெட் எடுத்து விட்டு, ரயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் மிஷின்களில் காகித டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளும் வசதியுள்ள உள்ளது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-11-2018

    16-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • gslvrocket

    ஜிசாட் 29 செயற்கைகோளை சுமந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி மார்க்3-டி2 ராக்கெட்

  • 15-11-2018

    15-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 129JawaharlalNehru

    நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 129வது பிறந்தநாள்: அரசியல் தலைவர் மரியாதை

  • 2018TiruvannamalaiDeepam

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்