SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேர்தலில் அதிமுகவை தோற்கடிப்போம் : 5 மாவட்ட விவசாயிகள் கொதிப்பு

2018-06-15@ 00:56:53

சேலம்: பசுமை சாலை திட்ட எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது: தமிழக முதல்வர் அடிப்படையில் ஒரு விவசாயி. விளைநிலங்களையும், நீராதாரங்களையும் அழித்து, இந்த திட்டத்தை செயல்படுத்துவதால் ஏற்படும் அபாயங்கள் அனைத்தும் அவருக்கு நன்றாகவே தெரியும். அப்படி இருக்கையில், ‘தமிழகத்தில் 8வழி பசுமை விரைவுச்சாலை அமைப்பது உறுதி’ என்று சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார். அவரது அறிவிப்புக்கு பிறகு அதிகாரிகள் திட்டப்பணிகளுக்கான நடவடிக்கைளை துரிதப்படுத்தியுள்ளனர். அரசு இயந்திரங்கள் அனைத்தும் விவசாயிகளை முடக்குவதிலேயே குறியாக உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் தமிழகத்தில் எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம் என்ற சூழல் உருவாகியுள்ளது.

இதை விவசாயிகள் முழுமையாக பயன்படுத்துவோம். 5 மாவட்டங்களில் பசுமை வழிச்சாலை, 7 மாவட்டங்களில் கெயில், தென்மாவட்டங்களில் நியூட்ரினோ, மேற்கு மாவட்டங்களில் மீத்தேன் என்று மாநிலம் முழுவதும் தொடர்ந்து, விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களை செயல்படுத்த அதிமுக அரசு அனுமதித்து வருகிறது. இதனால் ஒட்டுமொத்த விவசாயிகளும் கடும் அதிருப்தியில் உள்ளனர். அந்த அதிருப்தியானது, அதிமுக அரசை அகற்றியே தீரவேண்டும் என்ற மனநிலையை உருவாக்கியுள்ளது. நிச்சயமாக வரும் தேர்தலில் அதிமுக அரசை தோற்கடிப்போம். அடுத்து வரும் ஆட்சியிலும், பசுமை வழிச்சாலை போன்று, விவசாயிகளை பாதிக்கும் திட்டங்களை ெசயல்படுத்த விடக்கூடாது என்பதில் உறுதியாக இருப்போம் என்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-06-2018

    23-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennai_protest123

    நீட் தேர்வில் நிரந்தர விலக்கு கோரி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயற்சி: மாணவர்கள் கைது

  • cleanesttrainPurityIndia

    ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் தூய்மை ரயில் - தூய்மை இந்தியா

  • fifa_fans123

    உலகக் கோப்பை கால்பந்து போட்டி: முகத்தில் வர்ணம் பூசி உற்சாகமாக கண்டுகளிக்கும் ரசிகர்கள்!

  • whatsapp_police11

    வாட்ஸ் அப் வதந்திகளை நம்பாதீர் : தண்டோரா போட்டு பிரச்சாரம் செய்யும் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு சல்யூட்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்