SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

பிச்சைக்காரர்போல் நடித்து கைவரிசை தபால் நிலையத்தில் 4 லட்சம் திருட்டு : மலப்புரம் அருகே பரபரப்பு

2018-06-15@ 00:54:43

திருவனந்தபுரம்: மலப்புரம் அருகே பிச்சை கேட்பதுபோல் தபால் அலுவலகத்திற்குள் சென்று 4 லட்சம் பணத்தை திருடிய ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் திரூர் கிழக்கு பஜார் பகுதியில் தபால் நிலையம் ஒன்று உள்ளது. இங்கு நேற்று முன்தினம் மதியம் சுமார் 1 மணியளவில் துணை போஸ்ட் மாஸ்டர் பார்கவி உள்பட 3 ஊழியர்கள் பணியில் இருந்தனர். அப்போது தலையில் தொப்பி அணிந்த ஒருவர் தபால் நிலையத்திற்கு வந்து பிச்சை கேட்டுள்ளார். இதையடுத்து அதிகாரி பார்கவி அவருக்கு உதவி செய்ய நினைத்து தனது பேக்கை திறந்து பணம் எடுத்து கொண்டிருந்தார்.

அப்போது மேஜை மீது 2 கட்டு 2 ஆயிரம் நோட்டுகள் என மொத்தம் 4 லட்சம் இருந்தது.  பிச்சை கேட்டு வந்த வடமாநில ஆசாமி திடீரென 4 லட்சத்தை எடுத்து கொண்டு அங்கிருந்து ஓடி விட்டார். விசாரணையின் போது போலீசார், அந்த பகுதியில் உள்ள கடையில் இருந்த சிசிடிவி கேமராவை   பார்த்த போது திருடிய நபர் தபால் நிலையத்திற்கு வந்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. மேலும் இந்த நபர் தான் மலப்புரம், கோட்டக்கலில் தனியார் மருத்துவமனையில் 15 ஆயிரம் திருடி சென்றதும் உறுதி செய்யப்பட்டது. இந்த தபால் நிலையத்தில் வாடிக்கையாளர் ஒருவர் தனது சேமிப்பு கணக்கை முடித்து 7.5 லட்சம் பணத்தை வாங்க வந்துள்ளார். அவரிடம் பணம் மதியம் தரப்படும் என கூறப்பட்ட நிலையில், தலைமை தபால் நிலையத்தில் இருந்து பணம் பெறப்பட்டது. பின்னர் அந்த பணத்தில் 4 லட்சத்தை எண்ணி மேஜையில் வைத்திருந்தனர். அப்போதுதான் பிச்சை கேட்டு வந்த ஆசாமி திருடி சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • amazon_bang_111

    ஆன்லைன் வர்த்தக் நிறுவனமான அமேசானின் சேகரிப்புக் கூடம் பெங்களூருவில் திறப்பு

  • northkorea_southkore

    வட கொரியாவில் முதன்முறையாக தென் கொரியா அதிபர் சுற்றுப் பயணம்

  • americatoday_flood123

    அமெரிக்காவின் கரோலினாவை புரட்டிய ஃபுலோரன்ஸ் புயல்

  • pakistan_vehicls12345

    பாகிஸ்தான் பிரதமர் மாளிகையில் பயன்படுத்தப்படும் 70 சொசுகு வாகனங்கள் ஏலம்

  • jawa_studentelection123

    ஜேஎன்யூ மாணவர் தேர்தல் - அனைத்திலும் இடதுசாரி மாணவர் அமைப்பினர் வெற்றி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்