SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

காஷ்மீர் காட்டுப் பகுதியில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை : வீரர் வீர மரணம்

2018-06-15@ 00:53:28

ஸ்ரீநகர்: காஷ்மீரில் காட்டுப்பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ராணுவ வீரர் ஒருவரும் உயிரிழந்தார். காஷ்மீர் மாநிலத்தின் பந்திப்போரா மாவட்டத்தில் உள்ள பனார் காட்டுப்பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. உடனே,  ராணுவ வீரர்கள் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது பதுங்கி இருந்த தீவிரவாதிகள், திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். வீரர்கள் நடத்திய பதில் தாக்குதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இருதரப்புக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் வீரர் ஒருவரும் வீர மரணம் அடைந்தார்.  இதனிடையே, புல்வாமா மாவட்டத்தில் உள்ள காங்கூ பகுதியில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் எந்த உயிர்ச்தேசமும் ஏற்படவில்லை. அந்த பகுதியில் வீரர்கள் தொடர்ந்து தீவிரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi68bday

    வாரணாசியில் பள்ளி மாணவர்களுடன் தனது 68வது பிறந்தநாளை கொண்டாடிய பிரதமர் மோடி

  • losangeleswaterlight

    லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கொண்டாடப்பட்ட நீர் விளக்கு விழா: ஏராளமானோர் பங்கேற்பு

  • vinayagarsilai

    சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு

  • mankutstromchina

    தெற்கு சீனாவில் பேரழிவை ஏற்படுத்திய மங்குட் புயல் : தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிவாரண பணிகள்

  • tirupathififth

    திருப்பதியில் 5வது நாள் பிரமோற்சவம் கோலாகலம் : தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்