SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பீகாரில் கும்பல் அட்டூழியம் கணவர் கண் எதிரில் மனைவி பலாத்காரம்

2018-06-15@ 00:52:48

கயா:  பீகாரில் மோட்டார் சைக்கிளில் சென்ற குடும்பத்தை ஆயுதங்களுடன் வழிமறித்த கும்பல், கணவரை கட்டி வைத்து மனைவி, அவரது 15 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பீகார் மாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவி மற்றும் 15 வயது மகளுடன் நேற்று முன்தினம் மோட்டார் ைசக்கிளில் சென்று கொண்டிருந்தார். சோன்டியா கிராமத்தை கடந்தபோது ஆயுதங்களுடன் வந்த கும்பல் அவர்களை வழிமறித்தது. ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அவர்களை இழுத்து சென்ற கும்பல் அங்கிருந்த மரத்தில் அந்த நபரை கட்டி வைத்துள்ளது. பின்னர் அந்த நபரின் கண் முன்னாலேயே மனைவி மற்றும் அவரது 15 வயது மகளை  பாலியல் பலாத்காரம் செய்துள்ளது.

பின்னர் இந்த சம்பவத்தை வெளியே கூறினால் குடும்பத்தை ஒழித்து கட்டிவிடுவோம் என்று மிரட்டிய அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது.
இந்நிலையில் கிராமத்தில் மாணவர்கள் இருவரிடையே செல்போன் மற்றும் பணம் பறித்ததாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சந்தேகத்திற்கிடமான 20 பேரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். இந்த விசாரணையின்போது நேற்று முன்தினம் இரவு தாய், மகள் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. பாதிக்கப்பட்ட தாய் மற்றும் மகள் பலாத்காரம் செய்த இருவரை அடையாளம் காட்டியுள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • thiruvan_5thdaycelb

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 5 ஆம் நாள்: விநாயகர், சந்தரசேகரர் மாட வீதியில் பவனி

  • rarephots_indiragandhi

    முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் அரிய புகைப்படங்கள்!

  • 2018_indiragandibirthdy

    இரும்பு பெண்மணி இந்திரா காந்தியின் 101 வது பிறந்த தினம்: தலைவர்கள் மரியாதை!

  • america_winterstorm2018

    வடகிழக்கு அமெரிக்க பகுதிகளில் தொடங்கியுள்ள முதல் பனிப்புயல்!

  • 2018wildfire_trumph

    கலிபோர்னியா காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட டிரம்ப்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்