SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வன்முறைக்கு ஒரே தீர்வு முன்னேற்றம் : சட்டீஸ்கர் நக்சல்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு

2018-06-15@ 00:52:03

பிலாய் : வன்முறைக்கு ஒரே தீர்வு முன்னேற்றம்தான் என்று நக்சல்களால் பாதிக்கப்பட்ட சட்டீஸ்கர் மாநிலத்தில் நடந்த விழாவில் பிரதமர் மோடி பேசினார். சட்டீஸ்கார் மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி நடக்கிறது. முதல்வராக ராமன்சிங் உள்ளார். இந்த ஆண்டு இறுதியில் இங்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு பிரதமர் மோடி பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க சட்டீஸ்கர் சென்றார். பிலாய் நகரில் நடந்த விழாவில் சுமார் ரூ.22 ஆயிரம் கோடி நலத்திட்டங்களை அவர் தொடங்கி வைத்து பேசியதாவது: வன்முறைக்கும், சதித்திட்டங்களுக்கு ஒரே நிரந்தர தீர்வு முன்னேற்றம்தான் என்று நான் நினைக்கிறேன். வளர்ச்சியுடன் கூடிய முன்னேற்றம் தான் எந்தவகையிலான வன்முறையையும் முடிவுக்கு கொண்டு வரும். சட்டீஸ்கர் மாநிலம் தான் நக்சல் தாக்குதலால் அதிக அளவு பாதிப்பை கண்டது. எனது தலைமையிலான அரசு தற்போது சட்டீஸ்கர் மக்களுக்கு நம்பிக்கையை அளித்துள்ளது. சட்டீஸ்கர் இயற்கை வளங்களில் இருந்து வரும் வருமானத்தின் ஒருபகுதியை இங்குள்ள மக்களின் நலத்திட்டங்களுக்கு எனது அரசு ஒதுக்கி வருகிறது. இதன் மூலம் சட்டீஸ்கர் மாநிலத்திற்கு கூடுதலாக ரூ.3 ஆயிரம் கோடி நிதி கிடைக்கிறது. இந்த நிதி மூலம் மருத்துவமனைகள், பள்ளிகள், சாலைகள் மற்றும் கழிவறைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

முந்தைய மத்திய அரசு சட்டீஸ்கர் மாநிலத்தை ஒட்டுமொத்தமாக புறக்கணித்தது. முதல்வர் ராமன்சிங் சட்டீஸ்கர் மாநிலத்திற்கு ஐஐடி கேட்டு நீண்ட காலமாக மத்திய அரசிடம் போராடினார். முந்தைய அரசு கேட்கவில்லை. ஆனால் எனது அரசு அமைந்த உடனேயே ஐஐடி உடனடியாக தொடங்க அனுமதி அளிக்கப்பட்டு சட்டீஸ்கரின் நீண்ட கால கோரிக்கை நிறைவேற்றப்பட்டது. சட்டீஸ்கர் முன்பு வனப்பகுதியும், பழங்குடி மக்களும் நிறைந்தபகுதி என்று அழைக்கப்பட்டது. இப்போது ஸ்மார்ட் சிட்டி என்று அழைக்கப்படுகிறது. நயா ராய்ப்பூர் நாட்டின் முதல் பசுமை ஸ்மார்ட் சிட்டியாகும். இது புதிய இந்தியாவின் தொடக்கம்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் தொலைநோக்கு திட்டத்துடன் முதல்வர் ராமன்சிங் செயல்பட்டு வருகிறார். முன்னேற்றம், நிலையான வளர்ச்சி, சட்டம் ஒழுங்கு, அமைதிக்கு அவர் முன்னுரிமை அளித்து வருகிறார். சட்டீஸ்கர் ஒன்றும் எனக்கு புதிய இடம் இல்லை. மத்திய பிரதேச மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்த போது இருசக்கர வாகனத்தில் இந்த மாநிலம் முழுவதும் நான் பயணம் செய்து இருக்கிறேன். அன்றில் இருந்து இன்று வரை ஒரு வருடம் கூட இங்கு வராமல் இருந்ததில்லை. இந்த மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் நான் பயணம் செய்து இருக்கிறேன்.சாதாரண அவாவ் செருப்பு போட்டவர்கள் கூட விமானத்தில் பறப்பதை நான் பார்க்க விரும்புகிறேன். அதுதான் எனது கனவு.இவ்வாறு அவர் பேசினார்.

72 ஆயிரம் கோடி நவீன இரும்பு ஆலை நாட்டிற்கு அர்ப்பணிப்பு

சட்டீஸ்கர் மாநிலத்தில் துர்க் மாவட்டத்தில் உள்ள பிலாய் இரும்பு ஆலை ரூ.72 ஆயிரம் கோடியில் நவீனப்படுத்தப்பட்டு விரிவுபடுத்தப்பட்டது. இந்த ஆலையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்து பேசும் போது,’ சுதந்திரம் பெற்றதில் இருந்து கட்ச் முதல் கட்டாக் வரை, கார்க்கில் முதல் கன்னியாகுமரி வரை இந்திய ரயில்வேக்கு தண்டவாளம் தயாரித்து கொடுக்கும் பணியை பிலாய் இரும்பு ஆலை செய்து வருகிறது’ என்றார். இந்த விழாவில் சட்டீஸ்ர் முதல்வர் ராமன்சிங், மத்திய அமைச்சர்கள் சவுத்திரி பிரேந்தர் சிங், மனோஜ்சிங்கா ஆகியோர் கலந்து கொண்டனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • chennai_pkankatchui1

  சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!

 • israelmoonshuttle

  சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை

 • chennai_laksh1

  திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா

 • chinadance

  சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்

 • Autoshow2019

  கனடாவில் சர்வதேச ஆட்டோ ஷோ 2019: முன்னணி நிறுவனங்களின் கிளாசிக் கார்கள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்