மகன்கள்தான் பெரிய வில்லன்கள் மங்களூருவில் முதியோருக்கு சித்ரவதை அதிகம் : டெல்லிக்கு 5வது இடம்
2018-06-15@ 00:51:23

புதுடெல்லி: முதியோர் அதிகளவில் துன்புறுத்தப்படும் டாப் 5 நகரங்களில் மங்களூர் முதலிடத்தை பெற்றுள்ளது. டெல்லிக்கு 5வது இடம் கிடைத்துள்ளது. `ஹெல்ப் ஏஜ் இந்தியா’ என்ற அறக்கட்டளை அமைப்பு, இந்தியாவில் டெல்லி, மங்களூர் உள்பட 23 நகரங்களில் முதியோர் அதிகம் துன்புறுத்தப்படுவது குறித்து ஆய்வு நடத்தியது. அதன் அறிக்கையை நேற்று அந்த அமைப்பு வெளியிட்டது. இதில், முதியோர்கள் அதிகளவில் துன்புறுத்தப்படும் டாப் 5 நகரங்களில் கர்நாடகாவின் மங்களூருக்கு முதலிடம் கிடைத்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி மேத்யூ செரியன் கூறியதாவது: முதியோரை துன்புறுத்துதல், அதற்கான பின்னணி உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆய்வு நடத்தியதில் 47 சதவீதத்துடன் மங்களூர் நகருக்கு முதலிடம் கிடைத்துள்ளது. 46 சதவீதத்துடன் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் 2வது இடத்தை பிடித்துள்ளது. போபால் 39 சதவீதத்துடன் 3வது இடத்தையும், அமிர்தசரஸ் 35 சதவீதத்துடன் 4வது இடத்தை பிடித்துள்ளன. முதியோர் அதிகம் துன்புறுத்தப்படும் நகரங்களில் டெல்லிக்கு 5வது இடம் கிடைத்துள்ளது. இங்கு 33 சதவீதம் அளவுக்கு முதியோர்கள் துன்புறுத்தப்படுகின்றனர்.
முதியோர்கள் எண்ணிக்கையில் 4ல் 1 பகுதியினர் துன்புறுத்தப்படுகின்றனர். முதியோர்களை துன்புறுத்துபவர்களில் அதிகம் பேர் அவர்களின் சொந்த மகன்களே. அதாவது, முதியோர்களை துன்புறுத்துபவர்களில் 52 சதவீதம் பேர் அவர்கள் பெற்ற மகன்கள்தான். 34 சதவீதம் அளவுக்கு மருமகள்கள் முதியோர்களை துன்புறுத்துவதும் தெரியவந்துள்ளது. முதியோர் துன்புறுத்துவது தொடர்பாக புகார் தெரிவிக்க இலவச தொலைபேசி எண்ணையும் இந்த அறக்கட்டளை அறிமுகம் செய்துள்ளது. துன்புறுத்தப்படும் முதியோர்களில் 52 சதவீதம் பேர் குடும்ப மானம் கருதி இது தொடர்பாக யாரிடமும் புகார் தெரிவிப்பதில்லை. மேலும், 34 சதவீதம் பேர் இந்த பிரச்னையை எப்படி சமாளிப்பது என தெரியாமல் உள்ளனர். புகார் தெரிவிப்பது குறித்து விழிப்புணர்வு பெரும்பாலான முதியோரிடம் இல்லை. இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் செய்திகள்
உ.பி.யில் வெடி விபத்து; 13 பேர் பலி
அசாமில் கள்ளச்சாராய பலி 85 ஆக உயர்வு
நடிகை விஜயலட்சுமி உடல்நிலை பாதிப்பு
கடந்தவை கையில் இல்லை ... நடப்பவை கையில் உள்ளன : வர்த்தக மாநாட்டில் மோடி பேச்சு
சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு தெலங்கானாவில் 15 லட்சம் வாக்காளர்கள் அதிகரிப்பு
நாட்டில் நிலவி வரும் வேலையில்லா திண்டாட்டத்தை மோடி அரசு ஒப்புக் கொள்ளாது : ராகுல் குற்றச்சாட்டு