SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

கனமழையால் உபி., திரிபுராவில் 19 பேர் பலி

2018-06-15@ 00:50:38

புதுடெல்லி: உத்தரப் பிரதேசம், திரிபுரா, மணிப்பூர், அசாமில் பெய்த மழைக்கு 11 பேர் பலியாகி உள்ளனர். உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. கோண்டா, சிதாப்பூர் மற்றும் பைசாபாத் மாவட்டங்களில் மழை காரணமாக ஏற்பட்ட விபத்துக்களில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மணிப்பூர் மற்றும் அசாமில் கடந்த 48 மணி நேரமாக பெய்து வரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.  மழை வெள்ளத்தில் சிக்கி  4 பேர் பலியாகினர். மணிப்பூரில் கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கு இன்று வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அசாமில் மழை காரணமாக ரயில் சேவை பாதித்துள்ளது. திமா ஹசோ மாவட்டத்தில் 5 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • georgiyaropecar

    ஜார்ஜியா நாட்டில் ரோப் கார்கள் மூலம் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் கிராம மக்கள்

  • chinaindustryexpo

    சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற 20வது சர்வதேச தொழில்நுட்பக் கண்காட்சி

  • thirupathiseventh

    திருப்பதியில் 7வது நாள் பிரமோற்சவம் : சந்திர பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா

  • 20-09-2018

    20-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • amazon_bang_111

    ஆன்லைன் வர்த்தக் நிறுவனமான அமேசானின் சேகரிப்புக் கூடம் பெங்களூருவில் திறப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்