SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்து அருண் ஜெட்லி - காங்கிரஸ் டிவிட்டரில் வார்த்தை போர்

2018-06-15@ 00:50:09

புதுடெல்லி: ராகுலை விமர்சித்ததால் காங்கிரசுக்கும் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லிக்கும் இடையே ‘வார்த்தைப் போர்’ தீவிரம் அடைந்துள்ளது. மத்திய நிதியமைச்சராக இருந்த அருண் ஜெட்லிக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சமீபத்தில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது வீட்டில் ஓய்வு எடுத்து வரும் ஜெட்லி, ராகுலுக்கும் காங்கிரசுக்கும் டிவிட்டர் பக்கம் மூலம் பதிலடி கொடுத்து வருகிறார். ஜெட்லி நேற்று முன்தினம் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘குடும்ப அரசியல் கொண்ட கட்சிகளில் பரம்பரையாக பதவிக்கு வரலாம். ஆனால், துரதிருஷ்டவசமாக அறிவை பரம்பரையாக பெற முடியாது. கற்பது மூலமே அதை பெற முடியும். அதேபோல், காங்கிரஸ் தகவல் தொடர்பு பொறுப்பாளரும் உண்மைகளை வெளியிட வேண்டும்’ என்று ராகுலை விமர்சித்தார்.

இதற்கு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுர்ஜிவாலா நேற்று கொடுத்த டிவிட்டர் பதிலில், ‘நாட்டின் ஏற்றுமதி சரிந்து விட்டது. 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு அளிப்பதாக கூறியது  பொய்யாகி விட்டது. நாட்டின் வராக்கடன் ரூ.10 லட்சம் கோடியாகி விட்டது. கொள்ளையடிப்பதும், ஊழலும் அரசின் விதிமுறைகளாகி விட்டன’ என்று கூறினார். அதற்கு ஜெட்லி வெளியிட்ட பதிலில், ‘இது அரசியல் விவாதம். இங்கு பழிபோட்டு பேசுவது பதிலாக இருக்காது. தயவு செய்து உண்மையாக பதில் கூறுங்கள்’ என்று தெரிவித்தார். இதற்கு உடனே பதிலளித்த சுர்ஜிவாலா, ‘காங்கிரஸ் தலைமையை நீங்கள் வசைபாடும்போது, அது உங்களுக்கு அரசியல் விவாதம் ஆகிறது. உங்களுக்கு உண்மையின் கண்ணாடியை காட்டினால் பதற்றமாகி, அதை வீண்பழி, அரசியல் சந்தர்ப்பவாதம் என்கிறீர்கள்’ என்று டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதற்கும் ஜெட்லி அளித்த உடனடி பதிலில், ‘பலவீனமான பொருளாதார நிலையில் இருந்தும், பொருளாதாரத்தை ஸ்தம்பிக்க வைத்த கொள்கைகளில் இருந்தும் மீண்டு, உலகின் வேகமாக முன்னேறும் பொருளாதார நாடாக இந்தியா மாறி இருப்பது, பொருளாதாரத்தை தவறாக கையாள்வதால் கிடைத்த முடிவாக இருக்க முடியாது. இது, மீண்டும் உங்களின் அறியாமையை காட்டுகிறது’ என்று கூறியுள்ளார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-06-2018

    24-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • kmkharippastatue

    சென்னையில் இந்திய ராணுவத்தின் முதல் தலைமைத் தளபதி கே.எம்.கரியப்பாவின் சிலை திறப்பு!

  • Stalinarrestvolunteersstirstir

    தி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது: தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலை மறியல்

  • president_kovindh_cuba123

    கியூபாவில் உள்ள பிடல் காஸ்ட்ரோ மற்றும் ஜோஸ் மார்டி நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மரியாதை!

  • RePlantingCanada

    அழிந்துவரும் காடுகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கனடா நாட்டு மக்கள்: வருவாயும் கிடைப்பதால் மகிழ்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்