SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகத்தில் எந்த இடத்தில் எய்ம்ஸ்? முடிவெடுக்க மேலும் 3 மாதம் தேவை

2018-06-15@ 00:48:26

மதுரை: தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை எங்கு அமையும் என முடிவெடுப்பது தொடர்பாக மேலும் 3 மாத கால அவகாசம் கேட்டு மத்திய அரசு தரப்பில் ஐகோர்ட் கிளையில் மனு செய்யப்பட்டுள்ளது. மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ஐகோர்ட் கிளை, தமிழகத்தில் எய்ம்ஸ் அமைப்பது குறித்து கடந்தாண்டு டிசம்பர் 31க்குள் முடிவெடுத்து மத்திய அரசு அறிவிக்க  உத்தரவிட்டிருந்தது. ஆனால், இதுவரை மத்திய அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை. எனவே, மத்திய சுகாதாரத்துறை செயலர் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனுவை கடந்த பிப்ரவரி 14ல் விசாரித்த நீதிபதிகள், எய்ம்ஸ் அமைப்பது தொடர்பான நடவடிக்கைகளின் தற்ேபாதைய நிலை குறித்து மத்திய அரசு தரப்பில் அறிக்கையை ஜூன் 14க்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தனர்.

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இயக்குநர் சஞ்சய்ராய் தரப்பில் தாக்கல் செய்த கூடுதல் மனுவில், ‘‘உரிய இடத்தை மதிப்பீடு செய்வது தொடர்பாக துணைக்குழு அமைக்க வேண்டும். இந்தக்குழுவினர் சவால் மதிப்பீட்டு முறை (challenging method) அடிப்படையில் சம்பந்தப்பட்ட இடங்களை ஆய்வு செய்து மதிப்பீடு செய்வர். இதற்கு அவர்களுக்கு 2 மாதம் வரை தேவைப்படும். மதிப்பீடு செய்த பின்னர் தேர்வுக்குழுவுக்கு பரிந்துரைப்பர். இந்த குழுவின் முடிவின் அடிப்படையில் 100 மதிப்பெண் பெறும் இடம் தேர்வு செய்யப்படும். இதன்பிறகு இந்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்று இடம் குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும். இதன்படி, உரிய இடத்தை தேர்வு செய்வதற்கான தேர்வுக்குழு ஜூன் 11ல் அமைக்கப்பட்டது. இவர்கள், ஜூன் 18ல் கூடி விவாதித்து மதிப்பீடு செய்து சம்பந்தப்பட்ட 5 இடங்களில் ஒன்றை மத்திய அரசுக்கு பரிந்துரைப்பர். அதன்பிறகு மத்திய அரசு சம்பந்தப்பட்ட இடத்தை இறுதி செய்யும். எனவே, தமிழகத்தில் எய்ம்ஸ் அமைப்பது தொடர்பான முடிவெடுக்க மேலும் 3 மாத கால அவகாசம் ேதவைப்படுகிறது’’ என்று கூறப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-02-2019

    24-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-02-2019

    23-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennai_pkankatchui1

    சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!

  • israelmoonshuttle

    சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை

  • chennai_laksh1

    திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்