SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சேலம் 8 வழி பசுமை சாலை திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு பொதுமக்கள் அணி அணியாய் வந்து கலெக்டரிடம் மனு

2018-06-15@ 00:46:18

சேலம்:  சேலம்-சென்னை இடையே 10ஆயிரம் கோடியில் 8 வழி பசுமைச்சாலை அமைக்கப்படுகிறது. இதற்காக 5 மாவட்டங்களில் 10 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள்,நீர்நிலைகள், மலைகள் அழிக்கப்படுகின்றன. இதற்கு எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில் சேலம் மாவட்டத்தில் பசுமை சாலை திட்டத்திற்கு நிலம் எடுக்க ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்க, நேற்று (14ம்தேதி) கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து  சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பாதிக்கப்பட்ட விவசாயிகள், நேற்று அணி,அணியாக கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து, தங்களது ஆட்சேபத்தை மனுக்களாக அளித்தனர். தூத்துக்குடியை போல் அசம்பாவித சம்பவங்கள் நடந்து விடக்கூடாது என்பதால்  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கலெக்டர் அலுவலகத்தின் நுழைவுவாயிலில் 6 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் அமைத்திருந்தனர்.

காலை 10.30 மணி முதல், ஆட்சேப மனு அளிக்க வந்த விவசாயிகளை கடும் சோதனைகளுக்கு பிறகு, வரிசையாக கலெக்டர் அலுவலகத்திற்கு அனுப்பினர்.  வழக்கமாக அலுவலகத்திற்கு வரும் அதிகாரிகளை கூட, போலீசார் விட்டு வைக்கவில்லை. மேலும் கண்ணீர் புகை குண்டு வீசும் வஜ்ரா வாகனம்  மற்றும் கைது நடவடிக்கைக்கு பயன்படுத்தப்படும் பஸ்கள், வேன்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. கலெக்டர் அலுவலகத்தின் தரை தளத்தில், ஐந்து கிராமங்களுக்கு ஒரு தனி தாசில்தார் தலைமையில், வருவாய்த்துறையினர் விவசாயிகளிடம் ஆட்சேபனை மனுக்களை பெற்றனர். அப்போது நிலவாரப்பட்டியை சேர்ந்த விவசாயி வெங்கடாசலம் கூறுகையில், ‘எனக்கு சொந்தமான ஒன்றரை ஏக்கர் நிலம், பசுமை வழிச்சாலை திட்டத்திற்காக கையகப்படுத்தப்படுகிறது. இந்த நிலத்தை நாங்கள் தர மாட்டோம். நிலத்திற்கு எவ்வளவு இழப்பீடு கொடுத்தாலும் வாங்க மாட்டோம்.’ என்றார்.

கெஜ்ஜல்நாயக்கன்பட்டி, நிலவாரப்பட்டியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், `அரசு இழப்பீடு கொடுத்தாலும், எங்களுக்கு வேறு தொழில் செய்யத் தெரியாது. எனவே, 50 கோடி இழப்பீடு கொடுத்தாலும் வாழ்வாதாரமான  நிலத்தை தர மாட்டோம். மனு அளிக்க வந்த எங்களை  பாதுகாப்பு என்ற பெயரில் சமூக விரோதிகளை போல், கடுமையாக சோதனை செய்து, கெடுபிடிகளை செய்தது மிரள வைக்குது’ என்றனர். ஆச்சாங்குட்டப்பட்டியை சேர்ந்த பெண்கள் கூறுகையில், பசுமை வழி சாலை என்ற பெயரில் பசுமையை அழித்து கொண்டு வரப்படும் இந்த திட்டத்தை முழுமையாக எதிர்ப்போம். அரசு போலீசாரை கொண்டு விவசாயிகளை மிரட்டி நிலங்களை கையகப்படுத்தினால், குடும்பத்துடன் தீக்குளிப்போம்,’ என்று கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

திருவண்ணாமலையில் கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை - சேலம் இடையே 8 வழிச்சாலை, திருவண்ணாமலை மாவட்டத்தில் 122 கிமீ தொலைவில் 96 கிராமங்களில் அமைகிறது. இதற்காக, 860 ஹெக்டர் பரப்பளவிலான நிலம் கையகப்படுத்தப்படுகிறது. என திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமி சமீபத்தில் அறிவித்தார். இந்த தகவலறிந்த கிராம மக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுதொடர்பாக, சி.நம்பியந்தல் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-02-2019

  24-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-02-2019

  23-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • chennai_pkankatchui1

  சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!

 • israelmoonshuttle

  சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை

 • chennai_laksh1

  திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்