SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

உதவியாளரை கட்டிப்பிடித்த விவகாரம் தாசில்தார் மீது மேலும் பல பெண்கள் பாலியல் புகார் : குமரி கலெக்டரிடம் மனு

2018-06-15@ 00:44:04

நாகர்கோவில்:  நாகர்கோவில் கலெக்டர் அலுவலக பெண் உதவியாளருக்கு, தாசில்தார் ஒருவர் பாலியல் தொல்லை அளித்த சம்பவம் நடைபெற்று ஆறு நாட்களாகியும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதற்கிடையே சம்பந்தப்பட்ட தாசில்தார் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட பெண் அலுவலர் உட்பட அலுவலக பெண் பணியாளர்கள் 10க்கும் மேற்பட்டவர்கள் குமரி மாவட்ட கலெக்டரிடம் கூட்டாக  மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 10ம் தேதி எங்கள் அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் பெண் அலுவலக உதவியாளரை துணை தாசில்தார் தொலைபேசியில் அழைத்து ஆன்லைன் சான்றிதழ் போடும் பணிக்கு வர வைத்துள்ளார்.

பின்னர் பணிக்கு போனில் அழைத்த அதிகாரி மதியம் 2 மணிக்கு வீடு திரும்பியதும் அங்கிருந்த தாசில்தார் அந்த பெண் உதவியாளரை தனது அலுவலக அறைக்கு அழைத்து அவரை கட்டிப்பிடித்து பாலியல் ரீதியாக தவறாக நடந்துகொள்ள முயற்சித்துள்ளார். விதவையான அந்த ஊழியர் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளார். மேலும் அவர் தற்கொலை செய்துகொள்ளும் மன நிலையில் இருந்து வருகிறார். மேலும் இதுபோன்று பல பெண் ஊழியர்களுக்கு தாசில்தார் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். அவர், செல்வாக்கு மிக்கவர் என்பதால் அவர்கள் புகார் அளிக்க அஞ்சுகிறார்கள். எனவே மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க கலெக்டர் உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi68bday

    வாரணாசியில் பள்ளி மாணவர்களுடன் தனது 68வது பிறந்தநாளை கொண்டாடிய பிரதமர் மோடி

  • losangeleswaterlight

    லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கொண்டாடப்பட்ட நீர் விளக்கு விழா: ஏராளமானோர் பங்கேற்பு

  • vinayagarsilai

    சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு

  • mankutstromchina

    தெற்கு சீனாவில் பேரழிவை ஏற்படுத்திய மங்குட் புயல் : தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிவாரண பணிகள்

  • tirupathififth

    திருப்பதியில் 5வது நாள் பிரமோற்சவம் கோலாகலம் : தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்