SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் 2 யூனிட்கள் பழுது

2018-06-15@ 00:43:23

தூத்துக்குடி: தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் கொண்ட 5 யூனிட்டுகள் செயல்பட்டு வருகிறது. இதன்மூலம் 1,050 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. முதல் மூன்று யூனிட்டுகள் நிர்ணயிக்கப்பட்ட ஆயுட்கால அளவைத் தாண்டி இயங்குவதால் அடிக்கடி பழுது ஏற்பட்டு மின் உற்பத்தி தடைபடுகிறது. இந்நிலையில், 4வது யூனிட் மின்மாற்றி நேற்று காலை பழுதடைந்தது.

இதன் காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 3வது யூனிட் பராமரிப்பு பணிக்காக கடந்த 1ம்தேதி முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் மொத்தம் 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 4வது யூனிட்  பழுதை சரி செய்யும் பணியில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chennai_pkankatchui1

    சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!

  • israelmoonshuttle

    சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை

  • chennai_laksh1

    திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா

  • chinadance

    சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்

  • Autoshow2019

    கனடாவில் சர்வதேச ஆட்டோ ஷோ 2019: முன்னணி நிறுவனங்களின் கிளாசிக் கார்கள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்