SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காதல் விவகாரம் பிடிக்காததால் அண்ணன் மகள் எரித்துக்கொலை : சித்தப்பா வெறிச்செயல்

2018-06-15@ 00:41:58

குளித்தலை : தனது வீட்டில் தங்கியிருந்த அண்ணன் மகளை, அவரது காதல் விவகாரம் பிடிக்காததால்  பெட்ரோல் ஊற்றி சித்தப்பாவே எரித்துக்கொன்றுள்ளார். கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சுப்ரமணியபுரத்தை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவரது மகள் நந்தினி(19). இவர் திண்டுக்கல் மாவடடம் காக்காதோப்பு பகுதியை சேர்ந்த தனது சித்தப்பா ராஜூ(58) வீட்டில் தங்கி, அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அப்போது உறவினரான ரமேஷ் என்பவருடன் நந்தினிக்கு காதல் ஏற்பட்டது. இந்த காதல் விவகாரம் ராஜூவுக்கு தெரிய வந்தது. இதுகுறித்து நந்தினியின் பெற்றோரிடம் ராஜூ தெரிவித்தார். அவர்கள் காதலுக்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து நேற்றுமுன்தினம் காதலன் வீட்டார் வந்து பெண் பார்க்கும் நிகழ்ச்சி நடப்பதாக இருந்தது. இது ராஜூவுக்கு பிடிக்கவில்லை.

இந்நிலையில் 12ம் தேதி இரவு வீட்டருகே நந்தினி தீப்பிடித்து எரிந்த நிலையில் அலறினார். அருகில் நின்ற ராஜூ மீது தீப்பிடித்தது. இதைபார்த்த அப்பகுதியினர் இருவரையும் மீட்டனர். இதில் நந்தினி இறந்தார். காயமடைந்த ராஜூவும் குளித்தலை ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக குளித்தலை போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணை குறித்து ேபாலீசார் கூறியதாவது: நந்தினியின் காதல் திருமணம் ராஜூக்கு பிடிக்கவில்லை. இதனால் நந்தினியை கொலை செய்ய திட்டமிட்டார். இதற்காக 12ம் தேதி வீட்டின் அருகே அவரை வரவழைத்தார். நந்தினி அங்கு வந்ததும், ராஜூ தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து நந்தினி மீது ஊற்றி தீ வைத்தார். உடல் முழுவதும் தீப்பிடித்ததால் அவர் அலறினார். அப்போது எதிர்பாராதவிதமாக ராஜூவின் மீதும் தீப்பற்றியது தெரியவந்தது. சிகிச்சை பெற்றுவந்த நந்தினி நேற்று முன்தினம் மாலை இறந்தார். இதனால், கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக மாற்றி விசாரித்து வருகிேறாம்.இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். சிகிச்சையில் உள்ள ராஜூ குணமடைந்ததும் அவரை கைது செய்வோம் என போலீசார் தெரிவித்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • CanadaSyrianChildren

    கனடாவில் உள்ள வீட்டில் பயங்கர தீவிபத்து: ஒரே குடும்பத்தை சேர்நத 7 குழந்தைகள் பலி

  • DroneLanternChina

    ட்ரோன்களைப் பறக்கவிட்டு வித்தியாசமான லாந்தர்ன் விளக்குத் திருவிழா: சீனாவில் நடைபெற்றது

  • AttukalPongalaKerala

    ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் விழா கொண்டாட்டம்: லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்பு

  • mahipoornima

    கும்பமேளாவில் மகி பூர்ணிமா கோலாகலம் : கங்கைக்கு திரண்டு வந்து புனித நீராடிய பக்தர்கள்

  • AeroShowBangalore19

    பெங்களூருவில் ஆசியாவின் மிகப்பெரிய ஏர் ஷோ: ரஃபேல் உள்ளிட்ட கண்கவர் விமானங்கள் சாகசம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்