SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

1 கோடி கேட்டு பைனான்சியரை கடத்திய மேலும் 2 பேர் கைது : 33 லட்சம், 28 சவரன் நகை பறிமுதல்

2018-06-15@ 00:41:21

சென்னை, ஜூன் 15: ரூ.1 கோடி பணம் கேட்டு பைனான்சியரை கடத்தி பணம் பறித்த வழக்கில் தலைமறைவாக இருந்த மேலும் 2 ேபரை போலீசார் ைகது செய்து ரூ.33 லட்சம் பணம் மற்றும் 28 சவரன் நகையை பறிமுதல் செய்தனர். சென்னை மேற்கு மாம்பலம் விவேகானந்தபுரம் 2வது தெருவை சேர்ந்தவர் மோகன்(47). இவர் வடபழனி பிள்ளையார் கோவில் தெருவில் விநாயகா என்டர்பிரைசஸ் என்ற பெயரில் ைபனான்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 23ம் தேதி வடபழனியில் உள்ள அலுவலகத்தில் இருந்த பைனான்சியர் மோகனை வங்கியில் லோன் வங்கி கொடுக்கும் சரவணகுமார் என்பவர் கத்தி முனையில் கடத்தினார். பின்னர் தாம்பரம் அருகே அழைத்து சென்று குண்டர்கள் உதவியுடன் பைனான்சியர் மூலம் அவரது மனைவிக்கு போன் செய்து மிரட்டி ரூ.33 லட்சம் பணத்தை பறித்தனர். மேலும், பைனான்சியர் அணிந்திருந்த 28 சவரன் நகையையும் பறித்து கொண்டு அவரை விடுவித்தனர்.

இந்தபுகாரில் கடந்த மே 31ம் தேதி பைனான்சியர் மோகனை கடத்திய சூளைமேட்டை சேர்ந்த நந்தகுமார்(23), எம்.எம்.டி.ஏ காலனியை சேர்ந்த ஷேக்தாவூத்(24), மதுரவாயலை சேர்ந்த சீனிவாசன்(22) மற்றும் வினோத்(24), மணி(எ)மணிகண்டன்(26) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.3.25 லட்சம் பணம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது. முக்கிய குற்றவாளியான சரவணகுமார்(எ)கிருஷ்ணராஜ் அம்பத்தூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த ெசல்லப்பாண்டி(27), சுதிர்குமார்(26) ஆகியோரையும் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.30 லட்சம் பணம், 28 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-04-2019

    23-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • MummifiedFoal

    42 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இறந்த குதிரையின் உடலில் உறைந்த ரத்தம்..: ரஷ்ய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

  • SriLankaHomage

    இலங்கை தொடர் வெடிகுண்டு தாக்குதலுக்கு உலகச் சமூகங்கள் அஞ்சலி: பிரான்சின் ஈபிள் டவரில் விளக்குகள் அணைப்பு!

  • selphiGorilla

    கொரில்லாக்களையும் விட்டு வைக்காத செல்ஃபி மோகம் : குஷியான போஸ்கள்

  • QingdaoNavalParade

    சீனாவில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட கப்பல் அணிவகுப்பை ஒட்டி துறைமுகம் வந்தடையும் பல்வேறு நாடுகளின் போர்க்கப்பல்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்