SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மீனவர்களின் வாழ்வுரிமையை பறிக்கும் வரைவு கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பாணையை திரும்ப பெற வேண்டும்

2018-06-15@ 00:35:38

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று வெளியிட்ட அறிக்கை: மத்திய பா.ஜ அரசு, தற்போது செயல்படுத்த முனைந்துள்ள சாகர்மாலா திட்டம், நீலப் பொருளாதாரக் கொள்கை மற்றும் கடலை கையகப்படுத்துதல் போன்றவற்றிற்காக கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பாணை மாற்றி அமைக்கப்பட்டு, புதிய வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது. கடற்கரையின் சூழலைப் பாதுகாக்கும் சதுப்பு நிலங்கள், உப்பளங்கள் முதலான பகுதிகள் உள்ளன. அப்பகுதிகளைப் பாதுகாப்பதும், அவற்றில் தொழில் நிறுவனங்களுக்கானக் கட்டுமானப் பணிகள் எதுவும் கூடாது என்பதும் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளன.

புதிய வரைவு அறிவிப்பாணையில் இது நீக்கப்பட்டு, சுற்றுலாத் திட்டங்களுக்கான கட்டுமானங்கள், பாலங்கள், சாலைகள் அமைக்கலாம் என்று திருத்தம் செய்யப்பட்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் ஆயிரம் கிலோ மீட்டர் நீள கடற்கரை பகுதிகளில் வாழும் லட்சக்கணக்கான மீனவர்களின் வாழ்வுரிமையைப் பறிப்பது மட்டுமின்றி, சுற்றுச்சூழல் சீர்கேடுகள், பருவ கால மாற்றங்களால் ஏற்பட்டு வரும் ஆபத்துகள் பெரும் அழிவை உருவாக்கும். புதிய வரைவு கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பு ஆணை 2018ஐ திரும்பப் பெற வேண்டும்.இவ்வாறு கூறியுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chennai_pkankatchui1

    சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!

  • israelmoonshuttle

    சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை

  • chennai_laksh1

    திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா

  • chinadance

    சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்

  • Autoshow2019

    கனடாவில் சர்வதேச ஆட்டோ ஷோ 2019: முன்னணி நிறுவனங்களின் கிளாசிக் கார்கள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்