SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பதவி நீடிக்கும் தகுதியை இழந்து விட்ட எடப்பாடி பதவி விலக வேண்டும் : ராமதாஸ் வலியுறுத்தல்

2018-06-15@ 00:34:27

சென்னை: “பதவி  நீடிக்கும் தகுதியை இழந்து விட்ட எடப்பாடி அரசு உடனடியாக பதவி விலக  வேண்டும்” என்று ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய 18 சட்டமன்ற உறுப்பினர்களின்  பதவி நீக்கம் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு மாறுபட்ட இருவேறு தீர்ப்புகளை  வழங்கியிருக்கிறது. இந்த வழக்கில் மிகவும் காலம் தாழ்த்தி வழங்கப்பட்டுள்ள இந்தத் தீர்ப்பு, அதிமுக அரசுக்கு  செயற்கையான ஆயுளைக் கொடுத்து, அதன் மூலம் தமிழகத்திற்கு மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி  உள்ளது என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை ஆகும். வழக்கில் 9 மாதங்களுக்குப் பிறகு தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. இந்த 9 மாத காலத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு ஏராளமான மக்கள் விரோத செயல்களை செய்திருக்கிறது; பல்லாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் செய்திருக்கிறது. இந்த வழக்கில் இறுதித் தீர்ப்பு வழங்கப்படுவதற்கு இன்னும் 3  மாதங்கள் ஆகும் என்று வைத்துக் கொண்டால், அதுவரை தமிழகம் தொடர்ந்து கொள்ளையடிக்கப்படும். அதுமட்டுமின்றி 18 உறுப்பினர்களின் தொகுதிகளில் வளர்ச்சிப்பணிகள் தொடர்ந்து பாதிக்கப்படும்.

சென்னை உயர் நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பு ஒருபுறம் இருக்க, தார்மீக அடிப்படையில் பினாமி அரசு பதவியில் நீடிக்கலாமா? என்று வினா எழுப்பப்பட்டால், இல்லை என்பதுதான் பதிலாக இருக்கும். அரசியலமைப்புச் சட்டத்தின்படி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்களில் பெரும்பான்மையினரின் ஆதரவு இருப்பவர்தான் முதல்வராக நீடிக்க முடியும். அந்த வகையில்  அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 136 சட்டப்பேரவை உறுப்பினர்களின் முழுமையான ஆதரவு முதலமைச்சருக்கு இல்லை.

அந்த வகையில், கடந்த ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் ஆளுனர் செய்த தாமதம், அதன்பின்னர் உயர் நீதிமன்றத்தில் 4 மாதங்களில் வழக்கு விசாரணை முடிவடைந்து விட்ட நிலையில், தீர்ப்பளிப்பதற்காக செய்யப்பட்ட 5 மாத தாமதம், இதன்பின்னர் மூன்றாவது நீதிபதியின் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளவிருக்கும் காலம் என கால தாமதங்களின் புண்ணியத்தில்தான் பினாமி அரசு காலம் தள்ளிக் கொண்டிருக்கிறது. எந்த வகையில் பார்த்தாலும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பதவி நீடிக்கும் தகுதியை இழந்து விட்டது. ஆகவே, பினாமி அரசு உடனடியாக பதவி விலக வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-06-2018

  23-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • chennai_protest123

  நீட் தேர்வில் நிரந்தர விலக்கு கோரி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயற்சி: மாணவர்கள் கைது

 • cleanesttrainPurityIndia

  ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் தூய்மை ரயில் - தூய்மை இந்தியா

 • fifa_fans123

  உலகக் கோப்பை கால்பந்து போட்டி: முகத்தில் வர்ணம் பூசி உற்சாகமாக கண்டுகளிக்கும் ரசிகர்கள்!

 • whatsapp_police11

  வாட்ஸ் அப் வதந்திகளை நம்பாதீர் : தண்டோரா போட்டு பிரச்சாரம் செய்யும் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு சல்யூட்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்