SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தந்தையை வழியனுப்பிய 6 மணி நேரத்துக்குள் எல்லை பாதுகாப்பு அதிகாரி பாக். துப்பாக்கிச்சூட்டில் பலி

2018-06-15@ 00:30:57

ஜம்மு: ஜம்மு ரயில் நிலையத்தில் தந்தையை கட்டியணைத்து வழியனுப்பிய 6 மணி நேரத்துக்குள் எல்லை பாதுகாப்பு படை அதிகாரி பாகிஸ்தான் துப்பாக்கிச்சூட்டில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எல்லைப் பாதுகாப்பு படையில் உதவி கமாண்டன்ட்டாக பணியாற்றுபவர் ஜிதேந்திரா (34). ஜம்முவின் சம்மா மாவட்டத்தில் எல்லை பாதுகாப்பு பணியில் இவர் ஈடுபட்டுள்ளார். இவரை பார்ப்பதற்காக அவரது தந்தை சமுந்திர சிங் சவுத்ரி, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரிலிருந்து ஜம்முவுக்கு சில நாட்கள் முன் வந்தார்.

மகனை பார்த்து விட்டு நேற்று முன்தினம் ஜெய்ப்பூர் திரும்பினார். ஜம்மு ரயில் நிலையத்தில் தனது தந்தையை கட்டியணைத்து வழியனுப்பி வைத்தார் ஜிதேந்திரா. பின் அவர் தனது பணிக்கு திரும்பினார். அப்போது, பாகிஸ்தான் தரப்பிலிருந்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் ஜிதேந்திரா பலியானார். இந்த தகவல் ரயிலில் ஜெயப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த அவரது தந்தை சுமந்திர சிங் சவுத்ரியிடம் எல்லை பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர். தன்னை கட்டியணைத்து வழியனுப்பிய மகன் 6 மணி நேரத்துக்குள் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தி கேட்டு சமுந்திர சிங் அதிர்ச்சியில் கதறி அழுதார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • militaryparangimalai

    ராணுவ வாகனங்கள், ஆயுதங்கள், யானை தந்தங்களுடன் கம்பீரமாக காட்சியளிக்கும் பரங்கிமலை ராணுவ பயிற்சி மையம்

  • guwahatidiadhani

    குவஹாத்தியில் தியோதானி திருவிழா கொண்டாட்டம் : விலங்குகளை பலி கொடுத்து பக்தர்கள் வழிபாடு

  • koreanwarmeet

    கொரிய போரின் போது குடும்பங்களை பிரிந்து சென்ற மக்கள் 65 ஆண்டுகளுக்கு பிறகு கண்ணீர்மல்க சந்திப்பு

  • srilankakitefestival

    இலங்கையில் பட்டம் திருவிழா கோலாகலம் : பல்லாயிரக்கணக்கானோர் வண்ணமயமான பட்டங்களுடன் பங்கேற்பு

  • studendsrussiachennai

    ரஷ்யா மற்றும் ஹங்கேரி கலாச்சார நிகழ்ச்சியில் பங்கேற்ற கூடங்குளம் மாணவர்கள் சென்னை திரும்பினர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்