SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

கேரளாவில் கனமழை சபரிமலைக்கு பக்தர்கள் கவனமுடன் வரவேண்டும் : கலெக்டர் வேண்டுகோள்

2018-06-15@ 00:29:51

திருவனந்தபுரம்: கேரளாவில் கனமழை பெய்து வருவதால் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் கவனமுடன் வருமாறு கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார். கேரளாவில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கோழிக்கோடு மற்றும் மலப்புரத்தில் நேற்று ஏற்பட்ட நிலச்சரிவில் 6 பேர் பலியானார்கள். இதையடுத்து மலையோர பகுதிகளுக்கு இரவு நேரங்களில் யாரும் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே ஆனிமாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நேற்று மாலை திறக்கப்பட்டது. இதனால் சபரிமலைக்கு மிக கவனமாக செல்லுமாறு பத்தனம் திட்டா மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
சபரிமலைக்கு இருசக்கர வாகனத்திலோ மூன்று சக்கர வாகனத்திலோ செல்வதை தவிர்க்க வேண்டும். பக்தர்கள் மரங்களுக்கு கீழும், மலைச்சரிவான பகுதிகளில் ஓய்வெடுக்க வேண்டாம்.  பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு மலை ஏறும் பக்தர்கள் மரங்களுக்கு அடியில் ஓய்வெடுப்பதை தவிர்க்க வேண்டும்.  இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • georgiyaropecar

    ஜார்ஜியா நாட்டில் ரோப் கார்கள் மூலம் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் கிராம மக்கள்

  • chinaindustryexpo

    சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற 20வது சர்வதேச தொழில்நுட்பக் கண்காட்சி

  • thirupathiseventh

    திருப்பதியில் 7வது நாள் பிரமோற்சவம் : சந்திர பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா

  • 20-09-2018

    20-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • amazon_bang_111

    ஆன்லைன் வர்த்தக் நிறுவனமான அமேசானின் சேகரிப்புக் கூடம் பெங்களூருவில் திறப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்