SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரதமர் பதவிக்கு ஆசைப்படவில்லை உ.பி. முன்னாள் முதல்வர் அகிலேஷ் பேட்டி

2018-06-14@ 21:53:13

லக்னோ: தற்போதைய மக்களவையின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு மே மாதத்துடன் முடிவுக்கு வருகிறது. அதற்கு முன்னதாக பொதுத் தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும். பாஜ தனது சாதனைகளை நம்பி ேதர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கான வாய்ப்புகளும் உள்ளது. இந்நிலையில் மத்தியில் ஆளும் பாஜ கூட்டணிக்கு எதிராக மெகா கூட்டணி அமைக்க காங்கிரஸ் முயற்சித்து வருகிறது. காங்கிரஸ் தலைமையை விரும்பாத தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி, தெலுங்கு தேசம் போன்ற மாநில கட்சிகள் 3 வது அணி முயற்சித்து வருகின்றன. இதற்கு மம்தா, பிஜு ஜனதா தள தலைவர் நவீன் பட்நாயக் போன்றோர் ஆதரவளித்து வருகின்றனர்.

எதிர்கட்சிகள் சார்பாக யார் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்பதில் குழப்பம் உள்ளது. பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதிக்கு பிரதமராகும் ஆசை இருப்பதாக கூறப்படுகிறது. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரும் முன்பு பிரதமராக ஆசைப்பட்டவர். முலாயம்சிங் யாதவ் சமாஜ்வாடி தலைவராக இருந்த போது பிரதமர் பதவிக்கு ஆசைப்பட்டார். தற்போது அவர் பின்னுக்கு தள்ளப்பட்டு அவரது மகன் அகிலேஷ் யாதவ் அக்கட்சியின் தலைவராக இருக்கிறார். அவருக்கு பிரதமர் ஆசை இருக்குமோ என்ற கேள்விக்குறி உள்ளது. இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் லக்னோ நகரில் அகிலேஷ் யாதவ் செய்தியாளர்களை நேற்று சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: பிரதமராக வேண்டும் என்ற நோக்கமோ அல்லது கனவோ எனக்கு இல்லை.  மாநிலத்தில் எக்ஸ்பிரஸ் சாலை மற்றும் மெட்ரோ ஆகியவற்றை அமைப்பது என்ற கனவுடன் இருக்கவே நான் விரும்புகிறேன். வருகிற மக்களவை தேர்தலில் பாஜவை தோற்கடிக்க அனைத்து கட்சி தலைவர்கள் மற்றும் எனது தொண்டர்கள் இணைந்து பணியாற்றும்படி நான் கேட்டுகொண்டுள்ளேன். மத்தியில் எதிர்க்கட்சிகள் அதிகாரத்தினை பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • chennai_pkankatchui1

  சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!

 • israelmoonshuttle

  சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை

 • chennai_laksh1

  திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா

 • chinadance

  சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்

 • Autoshow2019

  கனடாவில் சர்வதேச ஆட்டோ ஷோ 2019: முன்னணி நிறுவனங்களின் கிளாசிக் கார்கள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்