SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பைனான்சியரை கடத்தி பணம் பறித்த சம்பவம்: தலைமறைவாக இருந்த மேலும் 2 பேர் கைது

2018-06-14@ 21:38:30

சென்னை: ரூ.1 கோடி பணம் கேட்டு பைனான்சியரை கடத்தி பணம் பறித்த வழக்கில் தலைமறைவாக இருந்த மேலும் 2 ேபரை போலீசார் ைகது செய்து ரூ.33 லட்சம் பணம் மற்றும் 28 சவரன் நகையை பறிமுதல் செய்தனர்.  சென்னை மேற்கு மாம்பலம் விவேகானந்தபுரம் 2வது தெருவை சேர்ந்தவர் மோகன்(47). இவர் வடபழனி பிள்ளையார் கோவில் தெருவில் விநாயகா எண்டர்பிரைசஸ் என்ற பெயரில் ைபனான்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 23ம் தேதி வடபழனியில் உள்ள அலுவலகத்தில் இருந்த பைனான்சியர் மோகனை வங்கியில் லோன் வங்கி கொடுக்கும் சரவணகுமார் என்பவர் கத்தி முனையில் கடத்தினார்.

பின்னர் தாம்பரம் அருகே அழைத்து சென்று குண்டர்கள் உதவியுடன் பைனான்சியர் மூலம் அவரது மனைவிக்கு போன் செய்து மிரட்டி ரூ.33 லட்சம் பணத்தை பறித்தனர். மேலும், பைனான்சியர் அணிந்திருந்த 28 சவரன் நகையையும் பறித்து கொண்டு அவரை விடுவித்தனர். இந்த சம்பவம் குறித்து பைனான்சியர் மோகன் அளித்த புகாரின்பேரில் வடபழனி போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த மே 31ம் தேதி பைனான்சியர் மோகனை கடத்திய சூளைமேட்டை சேர்ந்த நந்தகுமார்(23), எம்.எம்.டி.ஏ காலனியை சேர்ந்த சேக்தாவூத்(24), மதுரவாயலை சேர்ந்த சீனிவாசன்(22) மற்றும் வினோத்(24), மணி(எ)மணிகண்டன்(26) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து ரூ.3.25 லட்சம் பணம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது. முக்கிய குற்றவாளியான சரவணகுமார்(எ)கிருஷ்ணராஜ் அம்பத்தூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த ெசல்லப்பாண்டி(27), சுதிர்குமார்(26) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.30 லட்சம் பணம், 28 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • guwahatidiadhani

    குவஹாத்தியில் தியோதானி திருவிழா கொண்டாட்டம் : விலங்குகளை பலி கொடுத்து பக்தர்கள் வழிபாடு

  • koreanwarmeet

    கொரிய போரின் போது குடும்பங்களை பிரிந்து சென்ற மக்கள் 65 ஆண்டுகளுக்கு பிறகு கண்ணீர்மல்க சந்திப்பு

  • srilankakitefestival

    இலங்கையில் பட்டம் திருவிழா கோலாகலம் : பல்லாயிரக்கணக்கானோர் வண்ணமயமான பட்டங்களுடன் பங்கேற்பு

  • studendsrussiachennai

    ரஷ்யா மற்றும் ஹங்கேரி கலாச்சார நிகழ்ச்சியில் பங்கேற்ற கூடங்குளம் மாணவர்கள் சென்னை திரும்பினர்

  • 21-08-2018

    21-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்