SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புகார் அளித்தும் பயனில்லை அருப்புக்கோட்டை அருகே கண்மாயில் மண் கடத்தல்: உயரதிகாரிகள் கவனிப்பார்களா?

2018-06-14@ 21:18:14

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே அனுமதியின்றி கண்மாயில் மண் அள்ளியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. அருப்புக்கோட்டை அருகே உள்ள ராமசாமிபுரத்தில் கருத்தக்குளம் கண்மாய் உள்ளது. இந்த கண்மாய்க்கு தும்பக்குளம் கண்மாய், கஞ்சநாயக்கன்பட்டி பெருமாள்கோவில் ஓடை, கல்கிடங்கு ஓடை ஆகிய பகுதிகளிலிருந்து மழைநீர் வந்து சேரும்.
தற்போது மழைநீர் வரத்து பகுதியெல்லாம் ஆக்கிரமிப்பு செய்து விட்டனர். இந்த கண்மாய்க் கரையில் இந்த பகுதி மக்களுக்கு தண்ணீர் பெறக்கூடிய வகையில் ஆழ்த்துளை கிணறு அமைத்து குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

மழைகாலங்களில் தண்ணீர் தேக்கி வைத்து விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. தனி நபர் கண்மாயில் உள்ள மண்ணை அனுமதியின்றி டிராக்டர்கள் மூலம் கொள்ளையடித்து வந்ததாக புகார் எழுந்தது. தொடர்ந்து அப்பகுதியில் உள்ள மக்கள் டிராக்டர்கள் மற்றும் ஜேசிபி இயந்திரத்தை சிறைபிடித்தனர். கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கொடுத்தனர். அவரது உதவியாளர் சம்பவ இடத்திறகு வந்து மணல் அள்ளுவதை தடுத்து நிறுத்தினார்.ஆர்டிஓ மற்றும் தாசில்தாரிடம் புகார் மனு கொடுத்தனர். தாசில்தார் இது குறித்து சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலருக்கு அறிக்கை கேட்டறிந்தார். அதன்படி அப்பகுதி மக்கள் தாசில்தாரிடம் புகார் மனு கொடுத்ததின் பேரில் தாசில்தார் உத்தரவின்படி சம்மந்தப்பட்ட கண்மாயிக்கு சென்று கிராம நிர்வாக அலுவலர் களஆய்வு மேற்கொண்டார். இதில் மண் திருடப்பட்டது தெரிந்தது.

இது குறித்து அப்பகுதியை சேர்ந்த முத்துப்பாண்டி, செந்தில் கூறுகையில்,‘‘கண்மாயில் 100 டிராக்டர்களுக்கு மேல் மண் அள்ளியுள்ளனர். கண்மாயிலிருந்து அவரது தோட்டத்திற்கு பாதை அமைத்துள்ளார். கண்மாயும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. எனவே குடிநீர் ஆதாரமாக இருந்து வரும் இந்த கண்மாயை மீட்டு மண் அள்ளியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து வருவாய்த்துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டினர். இது குறித்து தாசில்தாரிடம் கேட்டபோது,‘‘கண்மாயில் மண் அள்ளியவர் மீது நடவடிக்கை எடுக்க ஆர்டிஓக்கு பரிந்துரை செய்துள்ளேன்’’என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • thaneerrr_kaari

    தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

  • gold_navaratchri11

    நவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்

  • balore_arrrres1

    சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது

  • gasa_vanvali111

    காசாவில் இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு : 32 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலி

  • hondu_aaas1

    அதிக வறுமை, ஊழல் நிலவும் ஹோண்டுராஸ் நாட்டில் இருந்து சுமார் 1,500 குடியேறிகள் அமெரிக்கா நோக்கி பயணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்