SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சாரல் குறைந்தபோதிலும் அணைகளில் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு: மெயினருவியில் குளிக்க தடை நீக்கம்

2018-06-14@ 19:26:24

வி.கே.புரம்: சாரல் குறைந்தபோதிலும் அணைகளில் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மெயினருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததையடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்ந்து மிதமான மழை முதல் பலத்த மழை வரை பெய்து வருகிறது. விகேபுரம், பாபநாசம் பகுதியில் நேற்று விட்டு விட்டு சாரல் இருந்த நிலையில் இன்று காலையில் சாரல் இல்லை. ஆனாலும் அணைகளில் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது.

பாபநாசத்தில் நேற்று 66.20 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று ஒரு அடி மட்டுமே கூடி 67.50 அடியானது. அணைக்கு வினாடிக்கு 1320 கன அடி தண்ணீர் வருகிறது. 288.49 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சேர்வலாறில் நேற்று 109.70 அடியாக இருந்தது இன்று 4 அடி கூடி 113.75 அடியானது. மணிமுத்தாறில் நீர்மட்டம் உயரவில்லை. 83.90 அடி உள்ளது. அணைக்கு 412 கன அடி வருகிறது. 45 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதுபோல் கடனாநதியில் 61.50 அடி உள்ளது. அணைக்கு 43 கன அடி வருகிறது. 10 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. ராமநதியில் நேற்று 69.25 அடியாக இருந்தது இன்று 2 அடி கூடி 71 அடியானது.

அணைக்கு 65.53 கனஅடி வருகிறது. 5 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மழை அளவு: பாபநாசம் 1 மி.மீ, சேர்வலாறு 4, குண்டாறு 82, கடனாநதி 16, செங்கோட்டை 5, சிவகிரி 2, தென்காசி 15 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. குற்றாலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் நன்றாக விழும் நிலையில் மெயினருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து நேற்று மதியத்திற்கு பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
    
இந்நிலையில் இன்று காலை அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததையடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். தற்போது மெயினருவியில் ஆண்கள் மற்றும் பெண்கள் குளிக்கும் பகுதியில் தண்ணீர் பரந்து விழுகிறது. ஐந்தருவியில் ஐந்து பிரிவுகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி ஆகியவற்றிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாக உள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • fifa_fans123

    உலகக் கோப்பை கால்பந்து போட்டி: முகத்தில் வர்ணம் பூசி உற்சாகமாக கண்டுகளிக்கும் ரசிகர்கள்!

  • whatsapp_police11

    வாட்ஸ் அப் வதந்திகளை நம்பாதீர் : தண்டோரா போட்டு பிரச்சாரம் செய்யும் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு சல்யூட்

  • manila_fire_accident

    மணிலாவில் இந்த ஆண்டு இதுவரை 2,200 தீ விபத்து... முடிவற்ற போரில் சிக்கி தவிக்கு தீயணைப்பு வீரர்களின் படதொகுப்பு!

  • vivsayigal_8valisaalai11

    8 வழிச்சாலைகாக கையகப்படுத்தும் நிலத்தை அளவிடும் பணி : வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொண்டு கதறும் விவசாய குடும்பத்தினர்

  • Hogenakkalparisalagain

    ஒகேனக்கல்லில் மீண்டும் களைகட்டிய பரிசல் சவாரி : உற்சாகத்தில் சுற்றுலாப் பயணிகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்