SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆண்டாள் கோயிலில் ஆனி சுவாதி உற்சவ விழா கொடியேற்றம்

2018-06-14@ 19:01:33

திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் திருஆனி சுவாதி உற்சவ விழா இன்று காலை  கொடியேற்றத்துடன் துவங்கியது. நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.  ஆண்டுதோறும் ஜூன் மாதம் விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் வளாகத்தில் உள்ள பெரியாழ்வாருக்கு திருஆனி சுவாதி உற்சவ விழா நடப்பது வழக்கம். இந்தாண்டு திருஆனி சுவாதி உற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக, கொடியேற்ற விழாவை முன்னிட்டு ‘கொடிபட்டம்’ மாடவீதிகளின் வழியாக மேளதாளம் முழங்க எடுத்து வரப்பட்டது. பின்னர் கொடிமரம் அருகே கொடிபட்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

தொடர்ந்து கொடியேற்றம் நடைபெற்றது. நிகழ்ச்சியில், தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி நாகராஜ் மற்றும் கோயில் ஊழியர்கள் உள்பட பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு பெரியாழ்வார் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். இன்று முதல் வரும் 25ம் தேதி வரை பல்வேறு அலங்காரங்களில் பெரியாழ்வார் காட்சி அளிப்பார். மேலும், வீதியுலா நிகழ்ச்சியும் நடைபெறும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • amerika_12

    இயற்கையின் கோரப் பிடியில் அமெரிக்கா : அடுத்தடுத்த சூறாவளி தாக்குதல்களுக்கு சின்னாபின்னமாகும் நகரங்கள்

  • kochi_fire11

    கொச்சியில் உள்ள வணிக வளாக கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து : 3 கடைகள் எரிந்து நாசம்

  • modi_varanasi11

    நரேந்திர மோடி வருகையால் விழாக்கோலம் பூண்டது வாரணாசி : காசி விசுவநாதர் கோவிலில் மோடி சிறப்பு வழிபாடு

  • nheru_soniaa11

    நாட்டின் முதலாவது பிரதமரான ஜவஹர்லால் நேருவின் 55வது நினைவு தினம் : சோனியா, ராகுல் காந்தி உள்ளிட்டோர் அஞ்சலி

  • malar_modi12

    2வது முறையாக பிரதமராகும் நரேந்திர மோடி ; கட்சித் தலைவர்கள் மோடிக்கு மலர் கொத்துக்களுடன் வாழ்த்து

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்