SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகத்தில் எய்ம்ஸ் அமையும் இடத்தை தெரிவிக்க 3 மாத அவகாசம் கோரி மத்திய அரசு மனு

2018-06-14@ 18:47:27

மதுரை: தமிழகத்தில் எய்ம்ஸ் அமையும் இடத்தை தெரிவிக்க 3 மாத அவகாசம் கோரி மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. தமிழகத்தில் எய்ம்ஸ் எங்கே அமைக்கப்படும் என்பது பற்றி பதில் தர மத்திய சுகாதாரத்துறை இயக்குநர் சஞ்சய்ராய் உயர்நீதிமன்ற கிளையில் மேலும் 3 மாதம் அவகாசம் கேட்டுள்ளார். 18ம் தேதி நடைபெறும் தேர்வு குழு கூட்டத்தில் இடம் தேர்வு செய்யப்படும் என்று கூறப்படுகிறது. தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை எங்கே அனைக்கப்படும் என்ற தகவலை வெளியிட வேண்டும் என மதுரையைச் சேர்ந்த கே.கே ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

மதுரை மாவட்டம் தோப்பூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி, ஈடோடு மாவட்டம் பெருந்துறை, காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு ஆகிய இடங்களை தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது. இந்த ஐந்து இடங்களில் எந்த இடத்தை மத்திய அரசு தேர்வு செய்யப்போகிறது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஏற்கனவே கேட்டிருந்தது. அது தொடர்பான வழக்கில் இன்று மத்திய அரசின் சார்பில் குடும்பநல மற்றும் சுகாதாரத்துறை இயக்குனர் சஞ்சய்ராய் என்பவர் பதில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அதில் வரும் 18ம் தேதி தமிழகத்தில் எய்ம்ஸ் எங்கே அமைப்பது என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். அதில் விமான வசதி, இரயில் வசதி உள்ள இடங்கள் குறித்து முழுமையாக ஆராய்ந்து அதன் பின் முடிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளார். இதனால் இது பற்றி பதில் தர மேலும் 3 மாதம் அவகாசம் தேவைப்படுவதாக தெரிவித்துள்ளார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-06-2018

    23-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennai_protest123

    நீட் தேர்வில் நிரந்தர விலக்கு கோரி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயற்சி: மாணவர்கள் கைது

  • cleanesttrainPurityIndia

    ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் தூய்மை ரயில் - தூய்மை இந்தியா

  • fifa_fans123

    உலகக் கோப்பை கால்பந்து போட்டி: முகத்தில் வர்ணம் பூசி உற்சாகமாக கண்டுகளிக்கும் ரசிகர்கள்!

  • whatsapp_police11

    வாட்ஸ் அப் வதந்திகளை நம்பாதீர் : தண்டோரா போட்டு பிரச்சாரம் செய்யும் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு சல்யூட்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்