SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எரிமலை வெடிப்பால் ஏற்பட்ட கரும்புகை மற்றும் சாம்பல் : கவுதமாலா விமான நிலையம் மூடல்

2018-06-14@ 17:52:51

கவுதமாலா சிட்டி: மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்று கவுதமாலாவில் உள்ள பியூகோ என்ற எரிமலை சில நாட்களுக்கு முன் வெடித்துச் சிதறியதில் எரிமலைக் குழம்புகளும், சாம்பல் துகள்களும் பரவின. ஏராளமான வீடுகளை எரிமலை குழம்புகள் மற்றும் சாம்பல் சூழ்ந்ததால் பொதுமக்கள் சிக்கிக்கொண்டனர். சுமார் 100-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.  இந்த எரிமலை வெடித்து சுமார் 10 கிலோ மீட்டர் உயரம் வரை வானத்தில் பரவியது. எரிமலை குழம்புகள் மற்றும் சாம்பல் சூழ்ந்ததால் பொதுமக்கள் கடும் அவதியுற்றனர். முதலில் 8 கிலோ மீட்டர் பகுதியை ஆக்கிரமித்த இந்த எரிமலை குழம்புகள் போக போக பல கிலோ மீட்டர் தூரம் வரை ஆக்கிரமித்தது.

பலர் பலியான நிலையில் 200-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். இந்நிலையில் எரிமலை வெடிப்பினால் ஏற்பட்ட புகை மற்றும் சாம்பல் காரணமாக அங்குள்ள விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளில் நலன்களை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு கூறியுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thaneerrr_kaari

    தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

  • gold_navaratchri11

    நவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்