SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு குறித்த முழுவிவரங்கள் வெளியீடு!

2018-06-14@ 17:41:31

சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் மனு கொடுத்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து 18 எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, சபாநாயகர் உத்தரவு செல்லும் என தீர்ப்பு வழங்கியுள்ளார். அதேபோல் 18 பேர் பதவியை பறித்தது செல்லாது என்று நீதிபதி சுந்தர் தீர்ப்பு வழங்கியுள்ளார். இதனையடுத்து நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பால் இந்த வழக்கு 3வது நீதிபதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பு குறித்த முழுவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 327 பக்கங்கள் கொண்ட தீர்ப்பில் 192 பக்கங்கள் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும், 133 பக்கங்களை நீதிபதி சுந்தரும் எழுதியுள்ளனர். இதில் 2 பக்கங்கள் இருவரும் சேர்ந்து எழுதியுள்ளனர்.

இதையடுத்து இந்த வழக்கு குறித்து விவரம் அளித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, சபாநாயகர் இப்படிதான் செயல்பட வேண்டும் என நிர்பந்திப்பது நீதிமன்றம் பணி அல்ல என்றும், சரியான காரணங்கள் இல்லாமல் சபாநாயகரின் முடிவில் தலையிட முடியாது என்றும் கூறியுள்ளார்.
இந்த வழக்கில் நீதிமன்றம் தலையிடுவதற்காக வாய்ப்புகள் மிக குறைவாக உள்ளன, சபாநாயகரின் அதிகாரத்தில் மிக குறைந்த அளவே தலையிட முடியும் என்று உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள் காட்டி இந்திரா பானர்ஜி விளக்கம் அளித்துள்ளார். மேலும் முழுக்க முழுக்க சட்ட விதிகள் மீறப்பட்டாலும், சட்டவிதிகளுக்கு புறம்பாக செயல்பட்டால் மட்டுமே நீதிமன்றம் தலையிட முடியும் என்றும், சபாநாயகரின உத்தரவில் எந்த விதிகளும் மீறப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தீர்ப்பு குறித்து விவரம் அளித்த நீதிபதி சுந்தர், ஆளுநரிடம் மனு அளித்தால் தகுதி நீக்கம் செய்ய முடியாது என்றும் ஆளுநரிடம் மனு கொடுப்பது கட்சி தாவல் என்று அர்த்தம் ஆகாது என்றும் கூறியுள்ளார். சபாநாயகரின் அதிகாரம் மக்களின்  நம்பிக்கையை பெறுவதற்கு மட்டும்தான், மக்களின் நம்பிக்கையை குலைப்பதற்கு அல்ல என அவர் கூறியுள்ளார். ஜக்கையன் என்ற எம்எல்ஏவுக்கு மட்டும் பாரபட்டம் காட்டப்பட்டுள்ளதாகவும், ஜக்கையன் தகுதிநீக்கப்படாததில் சபாநாயகர் உள்நோக்கத்துடன் செயல்பட்டது தெரிகிறது என்று நீதிபதி சுந்தர், தகவல் அளித்துள்ளார். சபாநாயகரின் முடிவு பாரபட்டசமாகவும், விதிகளுக்கு எதிராகவும் உள்ளது. மேலும் எடியூரப்பா வழக்கை கருத்தில் எடுத்துக்கொள்ளவில்லை, சபாநாயகரின் தீர்ப்பில் உள்நோக்கம் இருப்பதால் நீதிமன்றம் தலையிடலாம் என்று அவர் கூறியுள்ளார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-06-2018

    24-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • kmkharippastatue

    சென்னையில் இந்திய ராணுவத்தின் முதல் தலைமைத் தளபதி கே.எம்.கரியப்பாவின் சிலை திறப்பு!

  • Stalinarrestvolunteersstirstir

    தி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது: தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலை மறியல்

  • president_kovindh_cuba123

    கியூபாவில் உள்ள பிடல் காஸ்ட்ரோ மற்றும் ஜோஸ் மார்டி நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மரியாதை!

  • RePlantingCanada

    அழிந்துவரும் காடுகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கனடா நாட்டு மக்கள்: வருவாயும் கிடைப்பதால் மகிழ்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்