SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தொழிற்சாலைகளை மூடினால் தமிழகத்தின் முன்னேற்றம் தடைபடும் : பொன்.ராதாகிருஷ்ணன்

2018-06-14@ 16:57:46

திருப்பூர்: தொழிற்சாலைகளை மூடினால் வேலை வாய்ப்பு குறைந்து, தமிழகத்தின் முன்னேற்றம் தடைபடும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமிழகம் முன்னேற்றமடைய கூடாது என சில அமைப்புகள் செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டினார். தமிழகத்தில் புதிய தொழிற்சாலைகள் ஏதும் வந்து விட கூடாது, இருக்கின்ற தொழிற்சாலைகளையும் மூட செய்ய வேண்டும் என்ற வேண்டுதலோடு சில அமைப்புகள் செயல்பட்டு வருவதாக சாடினார்.

அவர்கள் நினைப்பத போல நடந்தால் தமிழகம் வேலைவாய்ப்பின்மையில் முதலிடம் பிடித்து விடும் என்றார். தமிழகத்தில் சென்ற ஆண்டு கர்நாடகத்தினுடைய முதலீட்டின் மொத்த சதவீதம் 38.8 ஆக உள்ளது. ஆனால் தமிழகத்தில் முதலீட்டினுடைய அளவு ஒரு சதவீதம் கூட இல்லை என்பது வருந்ததக்கது. இப்படி இருந்தால் தமிழகத்தில் யார் தொழில் துவங்க வருவார்கள் என வினவினார். தமிழகத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்பட்டு விட கூடாது என நினைத்து சிலர் செயல்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • guwahatidiadhani

    குவஹாத்தியில் தியோதானி திருவிழா கொண்டாட்டம் : விலங்குகளை பலி கொடுத்து பக்தர்கள் வழிபாடு

  • koreanwarmeet

    கொரிய போரின் போது குடும்பங்களை பிரிந்து சென்ற மக்கள் 65 ஆண்டுகளுக்கு பிறகு கண்ணீர்மல்க சந்திப்பு

  • srilankakitefestival

    இலங்கையில் பட்டம் திருவிழா கோலாகலம் : பல்லாயிரக்கணக்கானோர் வண்ணமயமான பட்டங்களுடன் பங்கேற்பு

  • studendsrussiachennai

    ரஷ்யா மற்றும் ஹங்கேரி கலாச்சார நிகழ்ச்சியில் பங்கேற்ற கூடங்குளம் மாணவர்கள் சென்னை திரும்பினர்

  • 21-08-2018

    21-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்