SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இனி நேரடியாக பார்க்கலாம் ரயில்களில் தயாராகும் உணவுகளை...: ரயில்வே அமைச்சகம் புதிய திட்டம்

2018-06-14@ 16:54:43

டெல்லி: ரயில்களில் தயாராகும் உணவுகளை இனி மக்கள் நேரடியாக  காணும் வசதியை ஏற்படுத்த ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது தகவல் வெளியாகியுள்ளது. ரயில்களில் உணவு தயாராகும் விதத்தை இணையதளம் மூலமாக நேரடியாக காணும் வசதி ஏற்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்களில் வழங்கப்படும் உணவுகள் தரமானதாக இல்லை என்று பயணிகள் புகார் தெரிவித்து வருகின்ற நிலையில் இந்த திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

முன்னதாக ரயில்களில் காணப்படும் குறைகள் மற்றும் நிறைகளை விரைவாக தீர்ப்பதற்காக  ‘ரயில் மதத்’ எனப்படும் செல்பேசி செயலியை மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தொடங்கி வைத்தார். இந்நிலையில் இதனை தொடர்ந்து பயணிகளுக்கு தரமான உணவு வழங்கப்படுவதை உறுதி செய்ய ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளதால், இனி ரயில்களில் வழங்கப்படும் உணவுகள் எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன என்பது பயணிகளுக்கு தெரியும் வகையில் நேரடியாக ஒளிபரப்ப  ரயில்வே அமைச்சகம்  முடிவு செய்துள்ளது.  ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தின் மூலம் பயணிகள் இந்த சேவையை காணலாம் என்றும் ,வெகுவிரைவில் இந்த திட்டம் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • guwahatidiadhani

    குவஹாத்தியில் தியோதானி திருவிழா கொண்டாட்டம் : விலங்குகளை பலி கொடுத்து பக்தர்கள் வழிபாடு

  • koreanwarmeet

    கொரிய போரின் போது குடும்பங்களை பிரிந்து சென்ற மக்கள் 65 ஆண்டுகளுக்கு பிறகு கண்ணீர்மல்க சந்திப்பு

  • srilankakitefestival

    இலங்கையில் பட்டம் திருவிழா கோலாகலம் : பல்லாயிரக்கணக்கானோர் வண்ணமயமான பட்டங்களுடன் பங்கேற்பு

  • studendsrussiachennai

    ரஷ்யா மற்றும் ஹங்கேரி கலாச்சார நிகழ்ச்சியில் பங்கேற்ற கூடங்குளம் மாணவர்கள் சென்னை திரும்பினர்

  • 21-08-2018

    21-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்