SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உடலுறுப்பு தானம் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடத் தயார் : அமைச்சர் விஜயபாஸ்கர்

2018-06-14@ 16:54:15

சென்னை: உடலுறுப்பு மாற்றம் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடத் தயார் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். தமிழகத்தில் மூளைச்சாவு அடைந்தவர்களின் உடலில் இருந்து எடுக்கப்படும் இதயம், அதற்காகக் காத்திருக்கும் இந்திய நோயாளிகளுக்கு வழங்கப்படாமல், வெளிநாட்டினருக்குப் பொருத்தப்படுவதாகத் தெரியவந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற மொத்த இதய மாற்று அறுவை சிகிச்சையில் 25 சதவிகிதம் பேர் வெளிநாட்டினர் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் 33 சதவிகித வெளிநாட்டினருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் மட்டும் சமீபத்தில் நடைபெற்ற 4 இதய மாற்று அறுவை சிகிச்சையில் 3 வெளிநாட்டினருக்கு இதயம் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இது தமிழகம் முழுவதும் பெரும் சர்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உடலுறுப்பு தானம் இரவு நேரங்களில் நடப்பதாக சட்டப்பேரவையில் திமுக எம்.எல்.ஏ செந்திலின் புகார் தெரிவித்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், உடலுறுப்பு தானத்தை பொறுத்தவரை வெளிப்படைத் தன்மையாக செயல்பட்டு வருகிறோம் என்று கூறியுள்ளார். உடலுறுப்பு தானத்தை பொறுத்தவரை இந்தியாவிலேயே தமிழகம் தான் முதலிடத்தில் இருக்கிறது என்றும் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

சிலர் தவறான தகவல்களை பரப்புவது வருத்தமளிப்பதாவும், உறுப்பு தானம் நடைமுறையின் அடிப்படையிலேயே தான் நடைபெற்று வருகிறது என அவர் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து சட்டசபையில் 110வது விதியின் கீழ் அறிவிப்புகள் வெளியிட்ட முதல்வர் பழனிசாமி சூரிய சக்தி கொள்கையின் கீழ் விவசாயிகளுக்கு பம்பு செட்டுகளுக்கு 90 சதவீத மானியம் வழங்கப்படும் என்று கூறியுள்ளார். ரூ.50 கோடியில் டெல்டா அல்லாத மாவட்டங்களுக்கு 500 சூரியசக்தி பம்புசெட்கள் வழங்கப்படும் என்றும், சிறுதானியங்கள் அதிகளவில் பயிரிட ரூ. 27.80 கோடி மானியம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • guwahatidiadhani

    குவஹாத்தியில் தியோதானி திருவிழா கொண்டாட்டம் : விலங்குகளை பலி கொடுத்து பக்தர்கள் வழிபாடு

  • koreanwarmeet

    கொரிய போரின் போது குடும்பங்களை பிரிந்து சென்ற மக்கள் 65 ஆண்டுகளுக்கு பிறகு கண்ணீர்மல்க சந்திப்பு

  • srilankakitefestival

    இலங்கையில் பட்டம் திருவிழா கோலாகலம் : பல்லாயிரக்கணக்கானோர் வண்ணமயமான பட்டங்களுடன் பங்கேற்பு

  • studendsrussiachennai

    ரஷ்யா மற்றும் ஹங்கேரி கலாச்சார நிகழ்ச்சியில் பங்கேற்ற கூடங்குளம் மாணவர்கள் சென்னை திரும்பினர்

  • 21-08-2018

    21-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்