SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் தெளிவான, நியாயமான தீர்ப்பு விரைவாக கிடைக்க வேண்டும் : மு.க.ஸ்டாலின்

2018-06-14@ 15:54:56

சென்னை: 18 எம்எல்ஏக்கள் வழக்கில் தெளிவான, நியாயமான தீர்ப்பு விரைவாக கிடைக்க வேண்டும் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் மனு கொடுத்ததால் டிடிவி தினரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை கடந்த செப்டம்பர் 18ம் தேதி தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். இதனை எதிர்த்து 18 எம்எல்ஏக்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், சபாநாயகர் உத்தரவு செல்லும் என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தீர்ப்பு வழங்கியுள்ளார். அதேபோல் 18 பேர் பதவியை பறித்தது செல்லாது என்று நீதிபதி சுந்தர் தீர்ப்பு வழங்கியுள்ளார். இந்த வழக்கில் நீதிபதிகள் மாறுப்பட்ட தீர்ப்பு வழங்கியதால், இந்த வழக்கு 3வது நீதிபதிக்கு செல்கிறது.

இந்த வழக்கை விசாரிப்பதற்கான 3வது நீதிபதி யார் என்பதை நீதிபதி குலுவாடி ரமேஷ் அறிவிப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. மாறுப்பட்ட தீர்ப்பால் 18 எம்எல்ஏக்கள் சட்டப்பேரவைக்கு செல்ல வாய்ப்பு இல்லை, மேலும் 18 தொகுதியிலும் இப்போது இடைத்தேர்தல் நடத்த ஏற்கனவே விதித்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின் 18 எம்எல்ஏக்கள் வழக்கில் தெளிவான, நியாயமான தீர்ப்பு விரைவாக கிடைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். ஜனநாயக மான்பினை காப்பதில் நீதிமன்றங்கள் மீது மக்கள் பெரும் நம்பிக்கை வைத்துள்ளனர் என்றும் தாமதிக்கப்படும் நீதி என்பது மறுக்கப்படும் நீதி என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் பெரும் காலதாமதத்திற்கு பிறகு கிடைக்கும் நீதி பயனற்றுவிடும், அதனை நீதிமன்றம் தவிர்க்கும் என நம்புவதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • guwahatidiadhani

    குவஹாத்தியில் தியோதானி திருவிழா கொண்டாட்டம் : விலங்குகளை பலி கொடுத்து பக்தர்கள் வழிபாடு

  • koreanwarmeet

    கொரிய போரின் போது குடும்பங்களை பிரிந்து சென்ற மக்கள் 65 ஆண்டுகளுக்கு பிறகு கண்ணீர்மல்க சந்திப்பு

  • srilankakitefestival

    இலங்கையில் பட்டம் திருவிழா கோலாகலம் : பல்லாயிரக்கணக்கானோர் வண்ணமயமான பட்டங்களுடன் பங்கேற்பு

  • studendsrussiachennai

    ரஷ்யா மற்றும் ஹங்கேரி கலாச்சார நிகழ்ச்சியில் பங்கேற்ற கூடங்குளம் மாணவர்கள் சென்னை திரும்பினர்

  • 21-08-2018

    21-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்